திமுக தலைவர் கருணாநிதியை ஜாதி ரீதியாக திட்டி விட்டார் வைகோ என்று ஊரே இன்று அல்லோகல்லப்படுகிறது. ஆனால் கருணாநிதியை ஜாதி ரீதியாக மிகக் கடுமையாக விமர்சித்தவர் சாட்சாத் தற்போது அவருக்குப் பக்கத்திலேயே இருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்தான். வைகோவை விட கடுமையாக விமர்சித்தவர் இளங்கோவன். இது நடந்து 11 வருடங்களாகி விட்டது. 2005ம் ஆண்டு நடந்த சம்பவம் இது.
இளங்கோவன் அன்று பேசிய பேச்சு திமுகவை கொந்தளிக்க வைத்தது. கருணாநிதியை ஜாதிரீதியாக திட்டியதோடு மட்டுமல்லாமல் அப்போது தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறனையும் அவன் இவன் என்று ஏக வசனத்திலும் பேசியிருந்தார் இளங்கோவன். அந்த பிளாஷ் பேக் இதோ...! என்ன தான் பேசினார் இளங்கோவன்? ஆனால் இன்று வைகோ கருணாநிதியைப் பேசியது குறித்து கருத்து தெரிவித்துள்ள இளங்கோவன், வைகோ மீது வைத்திருந்த மரியாதை போய் விட்டது என்று ரொம்பவே சலித்துக் கொண்டுள்ளார். அதிலும் ஒருமையில் வைகோ பேசியது தன்னை மிகவும் வேதனைப்படுத்தி விட்டதாக இவர் விசனப்பட்டுள்ளார் என்பதுதான் ஹைலைட்டானது...!


No comments:
Post a Comment