எனது நட்பு வட்டத்தில் இருந்த எனது அன்பு சகோதரியும், 40 வருடங்களுக்கும் மேலாக நான் தொடர் வாசகனாக இருக்கும் நர்கிஸ் இதழின் ஆசிரியையுமான சகோதரி அனீஸ் பாத்திமா அவர்கள் வபாத் ஆகி விட்டார்கள்..
நர்கிஸ் இதழின் தீவிர வாசகனாக இருந்து, அந்த இதழின் நினைவாக என் மகளுக்கு நர்கிஸ் என் பெயரிட்டதையும் இங்கு அன்புடன் நினைவு கூறுகிறேன் ..
எனது பதிவுகளுக்கு மறக்காமல் பின்னூட்டம் அளித்து வந்தவர்..
உடன்பிறந்த சகோதரியை இழந்த துக்கத்தை அனுபவிக்கிறேன்.
திருச்சியிலிருந்து 1972 ஆம் ஆண்டு முதல் வெளிவந்து கொண்டிருக்கும் பிரபல முஸ்லிம் பெண்கள் மாத இதழின் பப்ளிஷரும், ஆசிரியையுமான எம். அனீஸ் ஃபத்திமா 23.11.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்குதிருச்சியில் மாரடைப்பால் வஃபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
உடல்நலக்குறைவு காரணமாக கடந்த இரு நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அனீஸ் ஃபாத்திமா சிகிச்சை பலனின்றி காலமானார்.
அன்னாரின் ஜனாஸா இன்று 24.11.2014 அஸர் தொழுகைக்குப் பின் ந.மு. பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
நர்கிஸ் நிறுவனர் அல்ஹாஜ் எம். முஸ்தபா ஹுஸைன் மறைவுக்குப் பின்னர் அவரின் மூத்த மகளான அனீஸ் ஃபாத்திமா நர்கிஸ் இதழை சிறப்புற நடத்தி வந்தார்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்தனை செய்கிறேன்
No comments:
Post a Comment