உத்தர பிரதேச தேர்தலில் நான் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லவில்லை என்று பிரியங்கா காந்தி தெரிவித்தார்.
உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸின் முதல்வர் முகமாக பிரியங்கா காந்தி இருப்பார் என பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பிரியங்கா காந்தி பேட்டி ஒன்றில், நீங்கள் முதல்வர் வேட்பாளரா என்று கேள்விக்கு, காங்கிரஸிலிருந்து வேறு யாரையும் பார்க்கிறீர்களா? என்று பதில் அளித்தார். இதனையடுத்து செய்தியாளர், அப்படியானால் நீங்கள் காங்கிரஸின் முதல்வர் முகமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பிரியங்கா காந்தி, என் முகம் எல்லா இடங்களிலும் தெரியும் தெரிவித்தார்.
பிரியங்கா காந்தியின் பதில் தான்தான் உத்தர பிரதேச காங்கிரஸின் முதல்வர் முகம் என்று சொல்வது போல் இருந்தது. ஆனால் அதனை பிரியங்கா காந்தி நேற்று மறுத்தார். இது தொடர்பாக பிரியங்கா காந்தி கூறுகையில், நான் (உத்தர பிரதேச தேர்தலில் காங்கிரஸின்) முகம் என்று நான் கூறவில்லை. நீங்கள் அனைவரும் ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்டதால் எரிச்சலில் (எல்லா இடங்களிலும் என் முகத்தை பார்க்கலாம்) என்று தெரிவித்தேன். முதல்வர் வேட்பாளர் யான் என்பதை கட்சியே முடிவு செய்யும். சில மாநிலங்களில் அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
பிரியங்கா காந்தி பேட்டியில், எனக்கும் ஆச்சரியமாக இருக்கு. 6-7 மாதங்களுக்கு முன்பே அவங்க (மாயாவதி) கட்சி சுறுப்பாக இல்லை. தேர்தல் நெருங்கும் போது தேர்தல் பணிகளை தொடங்கலாம்னு நினைக்கலாம். ஆனால் தேர்ததல் ஆரம்பிச்சு நடுவுல இருக்கோம் ஆனால் அவர்கள் (மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி) இன்றும் சுறுசுறுப்பாக செயல்படவில்லை. நீங்கள் சொன்னது போல் அவர் (மாயாவதி) மிகவும் அமைதியாக இருக்கிறார், என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment