Latest News

முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தி அதிரை மாணவன் படுகொலை !!!


அதிரை கீழத்தெருவில் வசித்து வரும் முஹம்மது நூஹு அவர்களின் மகன் ஹாஜா [ வயது 20 ] , அதிரை பிலால் நகர் பகுதியைச் சேர்ந்தவர் காதர் முஹைதீன் [ வயது 23 ]

நேற்று [ 23-11-2012 ] மாலை சுமார் 5.45  மணியளவில் காட்டுப்பள்ளி தர்ஹா அருகே தனியாக நின்றுகொண்டு இருந்த ஹாஜாவை முதுகுக்கு பின்னால் சென்ற காதர் முஹைதீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்.

இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாணவனை அருகில் நின்றவர்கள் அரசு மருத்துவனைக்கு எடுத்துச்சென்றனர். அங்கே போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் அங்குள்ள மருத்துவர்களால் முதலுதவி மாத்திரம் செய்யப்பட்டு மேற்கொண்டு சிகிச்சையளிக்க தஞ்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்த அதிரை த.மு.மு.க வினருக்கு சொந்தமான ஆம்புலன்சில் உடல் எடுத்துச் செல்லப்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதியளிக்கப்பட்டது. உடலில் பல்வேறு இடங்களில் பலமாக காயம் ஏற்பட்டதால் மருத்துவர்களின் சிகிச்சைகள் பலனின்றி இன்று [ 24-11-2012 ] அதிகாலை சுமார் 4.45 மணியளவில் உயிர் பிரிந்தன [ இன்னா லில்லாஹி...] பிரத பரிசோதனையடுத்து உடல் இன்று உறவினரிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது.

கத்தியால் குத்திய காதர் முஹைதீன் காவல்துறையில் சரண் அடைந்ததை தொடர்ந்து வழக்கு அவர் மீது போடப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சில மாதங்களுக்கு முன்பு எற்பட்ட விரோதத்தின் காரணமாகவே கத்திகுத்து நடைபெற்றது என்ற பேச்சு பொதுமக்கள் மத்தியில் நிலவுகிறது. இச்சம்பவம் தெருவின் முக்கிய பகுதியில் நடைபெற்றதால் அப்பகுதி பெரும் பரபரப்புடன் காணப்படுகின்றன.

நன்றி : அதிரைஎக்ஸ்பிரஸ்

7 comments:

  1. "இன்னாஹி லில்லாஹி வஇன்னாஹிலைஹி ராஜிவூன்" விலை மதிக்க முடியாத அந்த உயிர் ஒரு கத்தியில் பரி போய் விட்டது. இளம் வயதினிலே கொடூர எண்ணங்களை கண்டு மனம் கலந்குஹிறது. இறைவன் அனைவருக்கும் பொறுமையை தருவானாக!!! ஆமீன் !!!
    தாய் , தந்தை , சகோதரன் , சகோதரி மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் அல்லாஹ் பொறுமையை தந்து அவர்களுடைய பேரிழப்பிற்கு ஈடு செய்ய துஆ செயஹிறேன்.
    அல்லாஹ் இறந்த சகோதரனின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து கபுருடைய வேதனையில் இருத்தும் நரகத்தின் வேதனையில் இருத்தும் பாதுகாத்து சுவன வாழ்வை அளிப்பாயாக !!! ஆமீன் !!!!

    ReplyDelete
  2. "இன்னாஹி லில்லாஹி வஇன்னாஹிலைஹி ராஜிவூன்"

    ReplyDelete
  3. இன்னாஹி லில்லாஹி வஇன்னாஹிலைஹி ராஜிவூன்" விலை மதிக்க முடியாத அந்த உயிர் ஒரு கத்தியில் பரி போய் விட்டது. இளம் வயதினிலே கொடூர எண்ணங்களை கண்டு மனம் கலந்குஹிறது. இறைவன் அனைவருக்கும் பொறுமையை தருவானாக!!! ஆமீன் !!!
    தாய் , தந்தை , சகோதரன் , சகோதரி மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் அல்லாஹ் பொறுமையை தந்து அவர்களுடைய பேரிழப்பிற்கு ஈடு செய்ய துஆ செயஹிறேன்.
    அல்லாஹ் இறந்த சகோதரனின் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து கபுருடைய வேதனையில் இருத்தும் நரகத்தின் வேதனையில் இருத்தும் பாதுகாத்து சுவன வாழ்வை அளிப்பாயாக !!! ஆமீன் !!!!

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.

    ReplyDelete
  5. "இன்னாஹி லில்லாஹி வஇன்னாஹிலைஹி ராஜிவூன்"

    ReplyDelete
  6. "இன்னாஹி லில்லாஹி வஇன்னாஹிலைஹி ராஜிவூன்"

    ReplyDelete
  7. இன்னாஹி லில்லாஹி வஇன்னாஹிலைஹி ராஜிவூன்"

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.