தலைப்பை பார்த்ததும் காமெடி கதையென்று நினைத்து விடாதீர்கள் ! மிகவும் கவனமாக படிக்க வேண்டிய செய்தி
சரி விசயத்திற்கு வருகிறேன்...
தஞ்சை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மருத்துவர்கள் தஞ்சாவூரில்
தங்களின் மருத்துவமனையை நிறுவி மருத்துவம் பார்த்து வருகின்றனர்
குழந்தைகள் மருத்துவத்திற்கும் சில புகழ் பெற்ற மருத்துவர்கள் உண்டுஅதில் முதியவர் சீதையின் மறு பெயரை முதலாவதாகக் கொண்டவர். இவர் மருத்துவம் கைராசிக்காரர் என்று பெண்கள் மத்தியில் நல்லகருத்து உண்டு !? எனவே குழந்தைகளுக்கு சிறு நோய் என்றாலும்உடனே அவரிடம் குழந்தைகளை அழைத்து செல்வதை வழக்கமாககொண்டுள்ளனர். இதனால் சினிமா தியேட்டரை போல் என்றும் ஒரே கூட்டம் ! டாக்டரும் அவசர கதியாய் ஒரு குழந்தைக்கு ஐந்து நிமிடம் வீதம் மருந்து, ஸ்கேன் என்று எழுதி காசு பார்த்து விடுகிறார் எப்படி சினிமா தியேட்டரில் டிக்கெட் கொடுப்பவரின் அவசர கதிபோல்செயல்படுகிறார் !
சென்ற வாரம் எனது பேத்திக்கு விட்டு விட்டு ஜுரம் வர உள்ளூர்
டாக்டரிடம் கூட்டி செல்ல மருத்துவம் வேலை செய்ய வில்லை
குழந்தை துவண்டு போய் விட்டாள் ஒரு வயது குழந்தை வலியை
சொல்ல தெரியாமல் முனக்கம்... முதியவரிடம் [ டாக்டரிடம் ] தஞ்சைக்குஅழைத்து செல்ல...
சினிமா டிக்கட் கொடுப்பதை போல் ஸ்கேன் எடுக்கசொல்லி ஒரு டிக்கெட் மருந்துக்கு ஒரு டிக்கெட் ..அதனை பெற்று கொண்டுஊர் வந்து சேர்ந்தார்கள். மருந்து வேலை செய்ய வில்லை. பிள்ளை நிலை கவலை கிடமாக போகவே உள்ளூர் டாக்டரிடம் அழைத்துசெல்ல... இத்தனை நாள் ஜுரம் விட்டு விட்டு வருகிறது என்றால் ரத்தபரிசோதனை செய்து அதனை பார்த்து விட்டு தான் என்னால் எதுவும் சொல்ல இயலும் என்று அறிவு பூர்வமாக கூறினார் ரத்தம் பரிசோதனை செய்யப்பட பிள்ளைக்கு டெங்கு அறிகுறி தெரிகிறது உடனே தஞ்சைக்கு செல்ல உத்தரவிட்டார் இறைவனின் பேருதவியால் பிள்ளை குணமாகி கண் விளித்து பார்க்கிறாள். ஸ்கேனில் கிடைக்கும் கமிசன் கூடுதல் என்பதால் அந்த கிழம் ஸ்கேன் டிக்கெட் கிழித்து கொடுத்து விட்டது. இரத்த பரிசோதனை செய்ய அவருக்கு மனமில்லை !
எனது அருமை சகோதரர்களே !
விட்டு விட்டு ஜுரம் வந்தால் ரத்த பரிசோதனை செய்ய தவறாதீர்கள்..! கூட்டம் அதிகம் உள்ள டாக்டர் சினிமா டிக்கட் கிழிப்பவர் போல் செயல்படாமல் இருந்தால் மட்டுமே நோயாளி நிலை அறிய முடியும் அனைவரிடமும் இந்த செய்தியை எடுத்துச்சொல்லுங்கள்.
இதனை அனைத்து இணைய தளத்திலும் வெளியிட்டு
ReplyDeleteவிளிப்புணர்வு ஏற்படுத்தும் தம்பி நிஜாமின் ஊடக பனி சிறக்க
வாழ்த்துக்களும் துஆக்களும் ..நன்றி
பிள்ளைகளுக்கு விட்டு விட்டு ஜுரம் வந்தால் மறக்காமல்
ரத்த பரிசோதனை செய்து கொள்ளுங்கள் ..
சில மருத்துவர்களுக்கு ..தலை கனத்தால் எனக்கு தெரியும்
நீ சும்மா இரு என்பார்கள் ..எதுவும் விபரீதம் ஏற்பட்டால்
சாரி ..என்பார்கள் ..விழிப்புணர்வு தேவை
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ReplyDeleteநல்ல விழிப்புணர்வு ஆக்கம் தந்தமைக்கு நன்றி நீங்கள் எனனை விட வயதில் மூத்தவரா அல்லது இளையவரா என்று எனக்கு தெரியவில்லை. ஆகையால் சகோதரர் சித்தீக் அவர்களே என்று கூறி விடுகிறேன், ஜமால் காக்கா அவர்கள் சொன்னது போல் ஒரு காலத்தில் மருத்துவர்கள் என்றால் ஒரு உயர்ந்த அந்தஸ்தில் இருந்தார்கள் அது என்னவோ உண்மை தான் ஆனால் இப்போது உள்ள டாக்டர்கள் அப்படியிருப்பார்கள் என்று எதிர் பார்க்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும், அவர்களையும் குறை சொல்ல முடியாது ஏன் என்றால் பல லட்சத்தை கொடுத்து படித்து அவர்கள் நாம் போட்ட முதலையும் லாபத்தையும் எடுக்க ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டி போட்டுக்கொண்டு சம்பாரிக்கும் நோக்கில் தான் உள்ளனர் குணம் அடையுதோ இல்லையோ பணம் வந்தால் போதும் மென்பதே அவர்களில் நோக்கம்.
அருமையான விழிப்புணர்வு ஆக்கம்.
ReplyDeleteபதிந்தமைக்கு நன்றி..!
ஆனால் என்னதான் நல்ல டாக்டர்கள் நமதூரில் இருந்தாலும் அநேக தாய்மார்களின் மன நிலை வெளியூரில்தூரமாக சென்று சிகிச்சை பெறுவதையே விரும்புகிறார்கள். அதுவே அவர்களுக்கு திருப்தி அளிக்கிறது. இந்த மன நிலையை முதலில் மாற்றவேண்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) கருத்து பதிந்தமைக்கு நன்றி மெய்சா காக்கா அவர்களே
ReplyDelete