மத்திய அமைச்சர்கள் ராம்விலாஸ் பஸ்வான், ராம்தாஸ் அத்வாலே மற்றும்
பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. இல. கணேசன் ஆகியோரை அடுத்தடுத்து திருமாவளவன்
சந்தித்து பேசியதால் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக்
கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இணைகிறதோ என்ற பரபரப்பு
ஏற்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலர் ரவிக்குமார் வெளிப்படையாகவே
பிரதமர் நரேந்திர மோடியை அண்மையில் பாராட்டியிருந்தார். இதற்கு
அக்கட்சியின் துணைப் பொதுச்செயலர் ஆளூர் ஷாநவாஸ் தம்முடைய ஃபேஸ்புக்
பக்கத்தில் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் திருமாவளவன் திடீரென டெல்லி சென்று மத்திய அமைச்சர் பஸ்வான்,
அத்வாலே ஆகியோரை சந்தித்தார். தேசிய தலித் முன்னணி கூட்டம் தொடர்பாக
ஆலோசிக்கவே தாம் சந்தித்ததாக திருமாவளவன் கூறியிருந்தார்.
இல. கணேசனுடன் சந்திப்பு
இதனிடையே டெல்லி விமான நிலையத்தில் பாஜகவின் ராஜ்யசபா எம்.பி.யான இல.
கணேசனையும் திருமாவளவன் நேற்று சந்தித்தார். இருவரும் ஒரே விமானத்தில்
சென்னை வந்தனர்.
திருமாவளவன் மறுப்பு
இதனால் பாஜக அணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இணையக் கூடும் என்ற
தகவல்கள் பரவின. ஆனால் இதனை நிராகரித்துள்ள திருமாவளவன், அப்பல்லோவுக்கு
போனால் அ.தி.மு.க. அணிக்கு தாவப் போகிறீர்களா? என்கின்றனர். டெல்லிக்கு
போனால் பா.ஜ.க. பக்கம் தாவப் போகிறீர்களா? என்கிறீர்கள்.
யதேச்சையாகத்தான்...
தேர்தல் அரசியலைத் தாண்டி சிந்திக்க முடியாதவர்கள் தான் இப்படி
விமர்சிக்கிறார்கள். டெல்லி விமான நிலையத்தில் இல. கணேசனை யதேச்சையாக
சந்தித்தோம்.
அரசியல் எதுவும் இல்லை
அவர் ராஜ்யசபா எம்.பி.யாகப் பதவியேற்று சென்னைக்கு திரும்பினார். அதே
விமானத்தில் நானும் பயணித்தேன். அப்போது அவருக்கு வாழ்த்து கூறினேன். இதில்
என்ன அரசியல் இருக்க முடியும்.
அழைக்காத திமுக
தி.மு.க. சார்பில் நடந்த விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில்
பங்கேற்க எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எங்கள் கட்சியிலும் விவசாய
அணி உள்ளது. ஆனால் அழைப்பு இல்லை. எங்களை அழைக்காததால் தி.மு.க. எடுத்த
முயற்சியை நாங்கள் எதிராக பார்க்கவில்லை என்றார்.
No comments:
Post a Comment