மலேசியாவில் நிகழ்ந்த பஸ் விபத்தில் 2 இந்தியர்கள் உள்பட 37 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் புதன்கிழமை நடந்தது.
ஜென்டிங் ஹைலாந்திலிருந்து 53 பயணிகளுடன் தலைநகர் கோலாலம்பூர் நோக்கி மலைப் பகுதியில் உள்ள குறுகிய சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் மலைப் பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 37 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 21 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும், 16 பேர் அடையாளம் தெரியவில்லை எனவும் சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரி ஜெய இந்திரன் சின்னதுரை தெரிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான பேருந்தைப் பயன்படுத்த போக்குவரத்து அலுவலகம் தடை விதித்துள்ளது. 44 பேர் மட்டும் செல்லக் கூடிய பஸ்ஸில், 53 பேர் பயணம் செய்துள்ளனர் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
No comments:
Post a Comment