தீவிர வலதுசாரி அமைப்பாக அடையாளம் காணப்படும் அபிநவ் பாரத் அமைப்பு மீது தடை விதிக்கக் கோரிய மகாராஷ்டிர மாநில அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. கடந்த 2008ல் மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் நிகழ்ந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் அபிநவ் பாரத் அமைப்பின் தொண்டர்கள் இருந்தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அதனை பயங்கரவாத அமைப்பாக சித்திரித்து, அதன் மீது தடை விதிக்கக் கோரியது மகாராஷ்டிர அரசு.
ஆனால், அதற்கு தடை விதிக்க மறுத்த மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், அண்மைக் காலத்தில் அந்த அமைப்பின் மீது பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான புகார்களோ, ஆதாரமோ, தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான ஆதாரமோ எதுவும் இல்லை என்று கூறியுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டில் இருந்து நிகழ்ந்த வன்முறைகள், குண்டுவெடிப்புச் சம்பவங்கள் ஆகியவற்றைக் குறித்து புலனாய்வு மேற்கொண்டுள்ள தேசிய புலனாய்வு அமைப்பு, அபினவ் பாரத் மீது எந்தக் குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை.
அபினவ் பாரத் அமைப்பு, மிகச் சிறிய ஹிந்து வலதுசாரி அமைப்பாக அறியப்பட்டது. அது, 2006ம் ஆண்டு, ஜிஹாதி பயங்கரவாத நடவடிக்கைக்கு பதிலடி தருவதற்காக சிலரால் அமைக்கப்பட்டது. மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து கொண்டு செயல்படுகிறது இந்த அமைப்பு.
No comments:
Post a Comment