
கடைசி பனிப்பாறையும் உடைந்தது - இந்த புவிக்கான எச்சரிக்கையா?
ஆர்டிக் பெருங்கடலில் உள்ள உடைந்த பனிப்பாறைகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது பிளானெட் எர்த் அப்சர்வேசன் நிறுவனம். கனடாவின் எல்ஸ்மேர் தீவு அருகே உள்ள இந்த பனிப்பாறைகள் ஜூலை இறுதியில் உடைந்துள்ளன. உடைந்த பனிப்பாறைகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இரண்டாகச் சிதைந்து ஆர்டிக் பெருங்கடலில் மிதந்துள்ளன.
கனடாவின் எல்லெஸ்மியர் பகுதியிலிருந்த கடைசி பனிப்பாறை அது. எல்லெஸ்மியர் தீவானது பனிப்பாறைகளால் சூழப்பட்ட தீவு. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 8,600 சதுர கிலோமீட்டர்களாக இருந்த அந்த பனிப்பாறைகள், பூமி வெப்பமயமாதலால் இப்போது 1,050 சதுர கிலோமீட்டர்களாக சுருங்கிவிட்டது. பூமி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான நேரடி சாட்சி இது என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
இஸ்ரேல் - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புதிய வரலாற்றுப்பூர்வ உடன்பாடு
இஸ்ரேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸும் அவற்றுக்கு இடையிலான சமூக உறவுகளை பேணுவதற்கான வரலாற்றுப்பூர்வ உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு, அபு தாபி பட்டத்து இளவரசர் மொஹம்மத் பின் ஜாயத் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், "இந்த வரலாற்றுப்பூர்வ திருப்பம், மத்திய கிழக்கில் அமைதியை மேம்படுத்தும்" என்று கூறியுள்ளனர்.
விரிவாகப் படிக்க:ஆக்கிரமிப்பு மேற்குக்கரை இணைப்பு திட்டத்தை இடைநிறுத்தியது இஸ்ரேல்: மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?
கொரோனா காலத்தில் பாதுகாப்பாக உடலுறவு வைத்துக்கொள்வது எப்படி?
வீட்டில் இருந்து வேலை பார்ப்பது, பொருட்களை வாங்குவது என கொரோனா தொற்று நெருக்கடிக்கு பிறகு வாழ்க்கை முறை மாறிவிட்டது.
இது பாலியல் உறவுக்கும் பொருந்தும் என்கிறது பாலியல் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் தொண்டு நிறுவனம்.
முத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், பாலியல் உறவு கொள்ளும்போது முகத்தில் மாஸ்க் அணிந்து, முகத்தோடு முகம் அருகில் இல்லாமல் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்வது அவசியம் என்று டெரென்ஸ் ஹிக்கின்ஸ் நிறுவனம் வலியுறுத்துகிறது.
விரிவாகப் படிக்க: கொரோனா காலத்தில் பாதுகாப்பாக உடலுறவு வைத்துக்கொள்வது எப்படி?
எஸ்.வி. சேகர் மீது வழக்குப் பதிவு: தேசிய கொடியை அவமதித்ததாக புகார்
தான் வெளியிட்ட காணொளி ஒன்றில் தேசிய கொடிக்கு தவறான அர்த்தம் கற்பித்துப் பேசியது தொடர்பாக நடிகர் எஸ்.வி. சேகர் மீது சென்னை நகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு வழக்கு பதிவுசெய்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பாக பெரியார் சிலையின் மீது காவிச் சாயம் ஊற்றப்பட்டது. பிறகு, எம்.ஜி.ஆர் சிலையின் மீது காவித் துண்டு போர்த்தப்பட்டது. இதற்கு அ.தி.மு.கவினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி கடுமையான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
விரிவாகப் படிக்க: தேசிய கொடி அவமதிப்பு புகார்: எஸ்.வி. சேகர் மீது வழக்குப் பதிவு
அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறதா? அதிமுகவின் கே.பி. முனுசாமி பதில்
அதிமுக - பாஜக கூட்டணி தொடருவதாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் எல். முருகன் தெரிவித்திருக்கும் நிலையில், அக்கூட்டணி தொடர்கிறது என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமியும் கூறியிருக்கிறார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, ஆளும் அஇஅதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி தொடர்கிறதா என்பது குறித்து கடந்த சில நாட்களாக சில அமைச்சர்கள் சிலர் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
விரிவாகப் படிக்க: அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறதா? அதிமுகவின் நிலைப்பாடு என்ன?
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
source: bbc.com/tamil
No comments:
Post a Comment