
மாநிலங்களின் கையிருப்பில் 2.58 கோடி கரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்தியில்,
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் சார்பில் இலவசமாக இதுவரை 27,90,66,230 கரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், 25,32,65,825 கரோனா தடுப்பூசிகள் இதுவரை உபயோகிக்கப்பட்டுள்ளது. கையிருப்பில் 2,58,00,405 தடுப்பூசிகள் உள்ளன. மேலும், மாநிலங்களுக்கு 19,95,770 தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே ஜூன் 21 முதல் 18 வயதுடையோருக்கு செலுத்த அனைத்து மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment