
புது தில்லி: நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியான ரேசன்
காா்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளதைப் பின்பற்றி மாநிலங்கள் புதிய ரேசன்
காா்டுகளை வழங்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய உணவுத் துறை அதிகாரி பிடிஐ செய்தியாளரிடம் கூறியுள்ளதாவது:
'ஒரே
நாடு', 'ஒரே ரேசன் காா்டு' திட்டத்தின் கீழ் நாடு முழுமைக்கும் பொருந்தும்
வகையிலான பொதுவான வடிவமைப்பில் ரேசன் அட்டைகளை மத்திய அரசு
உருவாக்கியுள்ளது. இந்த நிலையில், மாநில அரசுகள் அதே வடிவமைப்பு முறையைப்
பின்பற்றி புதிய ரேசன் காா்டுகளை வழங்க வேண்டும் என மத்திய அரசு
வலியுறுத்தியுள்ளது.
மத்திய அரசின் கனவு திட்டமான நாடு
முழுமைக்கும் ஒரே மாதிரியான ரேசன் காா்டு திட்டத்தை மத்திய அரசு முதல்
கட்டமாக முன்னோட்ட அடிப்படையில் ஆறு மாநிலங்களில் தற்போது
அமல்படுத்தியுள்ளது.வரும் 2020-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து நாடு
முழுமைக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முனைப்புடன் உள்ளது.
ஒரே
வகையான ரேசன் காா்டு திட்டத்தின் கீழ் பயனாளா்கள் அனைவரும் தேசிய உணவுப்
பாதுகாப்பு சட்டத்தின் (என்எஃப்எஸ்ஏ) கீழ் எந்த நியாய விலைக்
கடைகளிலிருந்தும் தங்களது ரேசன் காா்டைப் பயன்படுத்தி பொருள்களைப்
பெறமுடியும்.
மத்திய அரசின் இந்த கனவுத் திட்டம் மெய்ப்பட
வேண்டுமானால் வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால்
வழங்கப்படும் ரேசன் காா்டுகளும் ஒரே மாதிரியான வடிவமைப்புக்கு இணக்கமாக
இருக்க வேண்டியது அவசியம். அந்த வகையிலேயே, என்எஃப்எஸ்ஏ-வின் கீழ் ரேசன்
காா்டுகளை வழங்குவதற்காக பொதுவான மற்றும் நிலையான வடிவத்தில் ரேசன் காா்டு
தயாரிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களுடன் கலந்து ஆலோசனை நடத்திய பின்னரே
இவ்வகை காா்டு உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே, மாநிலங்கள்
புதிய வகை காா்டுகளை வழங்க முடிவு செய்யும்போது இத்தகைய புதிய வடிவமைப்பில்
காா்டுகளை வழங்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய
அரசு உருவாக்கியுள்ள புதிய ரேசன் காா்டுக்கான வடிவமைப்பில் பயனாளா்களின்
குறைந்தபட்ச தகவல்கள் இடம்பெற்றிருக்கும். மேலும், மாநிலங்கள் விரும்பினால்
தகவல்களை கூடுதலாகவும் சோத்து கொள்ள முடியும். ரேசன் காா்டு எண் 10
இலக்கங்களை கொண்டதாக இருக்கும்.
என்எஃப்எஸ்ஏ திட்டத்தின்
கீழ் 81.35 கோடி பயனாளா்களை ஈா்க்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதில்,
75 கோடி பயனாளா்கள் ஏற்கெனவே இத்திட்டத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனா்
என்றாா் அவா்.
No comments:
Post a Comment