இந்திய தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதாகமல்
இருப்பதற்காக டிடிவி தினகரன் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக தேர்தல் ஆணையத்துக்கு ரூ50 கோடி லஞ்சம்
கொடுக்க முயன்றார் தினகரன் என்பது வழக்கு. இதற்காக தினகரனுக்கு புரோக்கர்
வேலை பார்த்த சுகேஷ் டெல்லி போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுகேஷிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் தினகரன்
மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குகள் போடப்பட்டுள்ளன.
மேலும் தினகரனை விசாரணைக்கு அழைக்கக் கோரும் சம்மனுடன் டெல்லி போலீஸ்
அதிகாரி தமிழகம் விரைந்துள்ளனர்.
இந்த நிலையில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை பார்க்க போவதாக தினகரன்
கூறியிருந்தார். இதற்காக பெங்களூரு சென்று ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்
தினகரன்.
ஆனால் சசிகலாவோ தினகரனை சந்திக்க மறுத்துவிட்டார். இதையடுத்து ஹோட்டலை
விட்டு வெளியே சென்ற தினகரன் எங்கே போனார் என தெரியவில்லை என
கூறப்படுகிறது.
அதிமுக நிர்வாகிகள் தினகரனை வழக்கமாக தொடர்பு கொள்ளும் செல்போன் சுவிட்ச்
ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் கைது நடவடிக்கையில் இருந்து தப்ப தினகரன்
தலைமறைவாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்வது தொடர்பாக தமது வழக்கறிஞர்களுடன்
தினகரன் ரகசிய இடத்தில் ஆலோசனை நடத்தி வரலாம் என்றும் அதிமுக வட்டாரங்கள்
கூறுகின்றன.
No comments:
Post a Comment