
சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெள்ளியன்று பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் ஆறு பேர் பலியாகினர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சிப்பிப்பாறையில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது.
அந்த ஆலையில் வெள்ளியன்று மதியம் திடீரென்று பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஆலையில் பணிபுரிந்த ஆறு தொழிலாளர்கள் சம்பா இடத்திலேயே பலியாகினர்.
மேலும் படுகாயமடைந்த நான்கு தொழிலாளர்கள் சாத்துர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment