
மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில்
உள்ள களக்காடு பகுதியில் விளையும் வாழைத்தார்களுக்கு மவுசு அதிகம். கேரளா
சந்தைகளில் களக்காடு வாழைத்தார்களுக்கு தனி கிராக்கி உள்ளது. இதனால்
விவசாயிகள் வாழைகள் பயிர் செய்வதையே அதிகம் விரும்புகின்றனர். இங்கு
விளையும் ஏத்தன் ரக வாழைத்தார்கள் சிப்ஸ் உள்ளிட்ட தின்பண்டங்கள் செய்ய
வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.இங்குள்ள வாழைத்தார்கள் கேரளா
சந்தைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தான் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் கேரளாவில் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதன்
எதிரொலியாக கேரள சந்தைகளுக்கு வியாபாரிகள் வராததால் வாழைத்தார்களும்
தேக்கம் அடைந்துள்ளன.
இதையடுத்து களக்காட்டில் வாழைத்தார்கள் விலை கடும்
வீழ்ச்சி அடைந்துள்ளது. 1 கிலோ ரூ.11 க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். எனவே தமிழக அரசே வாழைத்தார்களுக்கு
விலை நிர்ணயம் செய்து, நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றும்,
வாழைத்தார் சந்தை அமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து
வருகின்றனர்.
No comments:
Post a Comment