
டிஜிட்டல் பண பரிவர்த்தனை தொடர்பான மோசடிகளைத் தடுக்க ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் நாளை (மார்ச் 16) முதல் அமலுக்கு வருகிறது.
இது
தொடர்பாக ரிசர்வ் வங்கி கடந்த ஜனவரி 15ஆம் தேதி ஒரு அறிவிப்பை
வெளியிட்டது. இந்த விதிகள் அனைத்து டெபிட்-கிரெடிட் கார்டுகளுக்கும்
பொருந்தும். இதில் கார்டுகளின் வசதிகளை மேம்படுத்தும் விதமாக transit
access pass என்ற நடைமுறையை கார்டு நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ளது.
இருப்பினும், புதிய விதிகள் ப்ரீபெய்ட் பரிசு அட்டைகள் மற்றும் மெட்ரோ
அட்டைகளுக்கு பொருந்தாது.

மார்ச் 16ம் தேதி முதல் புதிய டெபிட் - கிரெடிட் கார்டுகளை வங்கிகள் வழங்கும்போது இந்தியாவில் உள்ள ஏடிஎம்கள் , ஸ்வைப் மெஷின்கள் மற்றும் பாயிண்ட் ஆஃப் சேல் ( பிஓஎஸ் ) டெர்மினல்களில் மட்டுமே பயன்படுத்தமுடியும். ஆன்லைனில் கூட பயன்படுத்த முடியாது. இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in
No comments:
Post a Comment