தமிழக அரசியல் வரலாற்றில் 2வது முறையாக "முதல்வர்" பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம். டான்சி நில பேர ஊழல் வழக்கில் சிக்கியதால் முதல்வராக இருந்த ஜெயலலிதா 2001ஆம் ஆண்டு பதவி விலக நேரிட்டது. அப்போது அதாவது 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ந் தேதி தமிழக முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார்.
'7 மாதம் முதல்வர்'
அதன் பின்னர் டான்சி வழக்கில் ஜெயலலிதா விடுதலையானார். இதனால் 2002ஆம் ஆண்டு மார்ச் 1-ந் தேதியன்று அதாவது 7 மாதங்களுக்குப் பின்னர் பன்னீர்செல்வம் தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
முதல்வர் பதவியை இழந்த ஜெ.
இதே போல கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவர் முதல்வர் பதவியை இழந்தார்.
மீண்டும் முதல்வரானார் பன்னீர்
இதனைத் தொடர்ந்து மீண்டும் முதல்வர் பதவியை ஏற்றார் பன்னீர்செல்வம். கடந்த 8 மாதங்களாக முதல்வராக இருந்து வருகிறார் பன்னீர்செல்வம்.
மீண்டும் ராஜினாமா செய்யும் ஓபிஎஸ்
தற்போது சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் வரும் 23-ந் தேதியன்று ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பதவியேற்க உள்ளார். இதனால் மே 22-ந் தேதியன்று அதாவது 8 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் ஓ. பன்னீர்செல்வம். தமிழக அரசியல் வரலாற்றில் இப்படி இரண்டு முறை முதல்வர் பதவியை கட்சித் தலைமைக்காக ஏற்று பின் ராஜினாமா செய்த சரித்திரம் ஓ.பி.எஸ்.க்கே உண்டு!!
No comments:
Post a Comment