
கொரோனா அறிகுறி இருப்பதாகக் கருதி மருத்துவமனையில்
தனிமைப்படுத்திக்கொண்ட மகன், அங்கிருந்தபடியே தனது தந்தையின் இறுதி
ஊர்வலத்தை பார்க்க நேர்ந்த சோகம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.
கட்டிலில்
இருந்து கீழே விழுந்து சிகிச்சை பெற்று வந்த தனது தந்தையை பார்ப்பதற்காக,
கத்தார் நாட்டில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த லினோ அபெல் என்ற இளைஞர்,
கடந்த 8ஆம் தேதி சொந்த ஊர் திரும்பினார். விமானநிலையம் வந்திறங்கிய
லினோவுக்கு லேசான இருமல் இருந்ததால், தானாகவே மருத்துவ அதிகாரிகளை அணுகி,
கோட்டயம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்தச் சூழலில், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த லினோ அபெலின் தந்தை உடல்நலம் மிகவும் மோசமடைந்து கடந்த 9ஆம் தேதி மரணமடைந்தார். ஒரே மருத்துவமனையில் இருந்தபோதிலும் கொரோனா அறிகுறியால், தனது தந்தையின் உடலை நேரில் பார்க்க முடியாத துரதிர்ஷ்டசாலி ஆனார், லினோ அபெல். மொபைல் வீடியோ கால் மூலமாக தனது தந்தையின் இறுதிச்சடங்கைப் பார்த்து துடித்துப் போனார். இதையடுத்து லினோ அபெலிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரியில் கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.
newstm.in
No comments:
Post a Comment