இந்தியாவில் தென்மேற்கு பருவமழை முடிந்து தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.. இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது..
தொடர் கனமழை மற்றும் முடிவில்லாத பருவமழை காலம் ஆகியவை காரணமாக முக்கிய ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.. இதன் காரணமாக கரையோர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் பேரழிவை ஏற்படுத்தியது. இப்போது, பருவநிலை மாற்றத்தின் விளைவுகளால், இந்தியாவை மேலும் வெள்ளம் தாக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

இந்திய அறிவியல் கழகம் (IISc) மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர் நடத்திய புதிய ஆய்வில், மனித செயல்பாடுகள் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை கங்கையின் வடிநிலத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகின்றன என்பது தெரியவந்துள்ளது.. மேலும் கங்கையின் ஓட்டத்தை மாற்றி, அருகிலுள்ள பகுதிகள் எதிர்காலத்தில். அதிக வெள்ளத்தை சந்திக்க நேரிடும் என்று கூறியுள்ளது.
சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு, அதிகரித்துள்ள மனித செயல்பாடுகள் கங்கையின் போக்கை ஏற்கனவே மாற்றியமைத்து மிகப்பெரிய மாசுபாட்டை ஏற்படுத்தியுள்ளன என்பதைக் காட்டுகிறது. அணைகள் கட்டுதல் மற்றும் பிற கட்டுமான நடவடிக்கைகள் இப்பகுதியை எவ்வாறு ஆழமாக பாதித்துள்ளன என்பதையும் அறிக்கை காட்டுகிறது.
மலை பகுதிகளில் கடந்தகால மனித நடவடிக்கைகளின் தாக்கங்கள் மற்றும் அவை எவ்வாறு மாசு மற்றும் காலநிலை மாற்றத்திற்கு வழிவகுத்தன என்றும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..
ஐஐடி மற்றும் ஐஐஎஸ்சி ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில், அலக்நந்தா படுகை 1995 முதல் 2005 வரை நீரின் ஓட்டத்தின் விகிதத்தில் 2 மடங்கு நீர் ஓட்டம் அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.. இது எதிர்காலத்தில் கங்கைப் படுகையில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் அபாயத்தைக் குறிக்கிறது.
இந்த ஆய்வின் முதன்மை ஆய்வாளர் சோமில் ஸ்வர்ங்கர் பேசிய போது " பாகீரதி நதி படுகை பெற்ரிருப்பதை நாங்கள் கவனித்தோம். எனவே, இந்த பிராந்தியங்களில் தீவிர ஓட்டத்தின் அளவு அதிகரிப்பதையும் நாங்கள் கண்டோம்" என்று தெரிவித்தார்..
No comments:
Post a Comment