Latest News

ரூ.170 கோடி பணம், 100 கிலோ தங்கம் பறிமுதல்.. நிறைவுக்கு வந்தது அருப்புக்கோட்டை வருமான வரி சோதனை!




கான்டிராக்டர் வீடு, அலுவலகத்தில் 2வது நாளாக ரெய்டு!
 
சென்னை: அரசு கான்டிராக்டர் வீடு, அலுவலகத்தில் 2 நாளாக நடந்த வருமான வரித்துறை சோதனை முடிவிற்கு வந்துள்ளது.
அருப்புக்கோட்டையில் சாலை ஒப்பந்ததாரர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். ஒப்பந்ததாரர் செய்யாதுரையின் சென்னை அலுவலகத்திலும் 2 வது நாளாக இன்று சோதனை நடந்தது .
ஆபரேஷன் பார்க்கிங் என்ற பெயரில் இந்த ரெய்டு நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் பல இடங்களில் பார்க் செய்யப்பட்டுள்ள கார்களில் பணம் பதுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 இன்றும் ரெய்டு
இன்றும் ரெய்டு இந்நிலையில் இவரது வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வந்தனர். அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்பிகே கன்ஸ்ட்ரக்ஷன் அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கான்டிராக்டர் செய்யாதுரை
கான்டிராக்டர் செய்யாதுரை சாலை ஒப்பந்ததாரர் செய்யாதுரை வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரில் அவருக்கு சொந்தமான இடங்களில் இந்த அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. செய்யாதுரைக்கு சொந்தமான எஸ்.பி.கே. கன்ஸ்ட்ரக்‌ஷன் குறுகிய காலத்தில் பெரும் வளர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.
சிறிய நிறுவனங்கள் பாதிப்பு
சிறிய நிறுவனங்கள் பாதிப்பு தமிழக நெடுஞ்சாலைதுறை ஒப்பந்த பணியை தன் கட்டுப்பாட்டில் இந்த நிறுவனம் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தால் சிறிய ஒப்பந்ததாரர்கள் நெடுஞ்சாலை பணியை பெறமுடியவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதிரடி சோதனை
அதிரடி சோதனை சென்னையில் உள்ள எஸ்.பி.கே. கன்ஸ்ட்ரக்‌ஷன் அலுவலகத்திலும் சோதனை நடைபெறுகிறது. மயிலாப்பூர் பெசன்ட் நகர் ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களில் இந்த அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.

பணம் தங்கம் பறிமுதல்
பணம் தங்கம் பறிமுதல் சென்னை உட்பட 30 இடங்களில் நேற்று நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 160 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. 100 கிலோ தங்கம் மூட்டை மூடடையாக பறிமுதல் செய்யப்பட்டது. பெரம்பூரில் 81 கிலோவும் தாம்பரத்தில் 19 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

முக்கிய ஆவணங்கள்
முக்கிய ஆவணங்கள் அருப்புக்கோட்டையில் நடைபெறும் சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக தொடரும் சோதனையில் மேலும் பல ஆவணங்களும் கணக்கில் வராத பணம், சொத்துக்குறித்த ஆவணங்கள் மற்றும் தங்கம் சிக்கலாம் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.