
மதுரை சிபிசிஐடி டிஎஸ்பி முரளிதரனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் இலங்கையைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல்காரர் அங்கட லக்கா தொடர்பான விசாரணையில் கோவை சிபிசிஐடி குழுவினருக்கு உதவியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை நகரில் பணியில் இருக்கும் காவல்துறையினர் கரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், இதுவரை 200-க்கும் மேற்பட்ட போலீஸாருக்கு கரோனா தொற்று பாதித்த நிலையில், பெரும்பாலனோர் குணமடைந்து பணிக்குத் திரும்பினர்.
அதிகாரிகளைப் பொறுத்தவரை தலைமையிடத்து காவல் துணை ஆணையர் பாஸ்கரனுக்கு தொற்று பாதித்து, சிகிச்சைக்குப்பின் குணமடைந்தனர்.
இந்நிலையில் மதுரை சிபிசிஐடி பிரிவிலுள்ள ஒருங்கிணைந்த குற்றத்தடுப்பு பிரிவு (ஓசியூ) டிஎஸ்பி முரளிதரன் என்பவருக்கு நேற்று கரோனா தொற்று இருப்பது கண்டறியப் பட்டது. இதைத்தொடர் அவர் தனிப்படுத்தப்பட்டார்.
இவர், இலங்கை போதைப்பொருள் கடத்தக்காரர் அங்கட லக்கா உடல் தகனம் செய்த விவகாரம் தொடர்பாக கோவை சிபிசிஐடி குழு மதுரையில் முகாமிட்டு விசாரித்தபோது, அவர்களுக்கு உதவியாக இருந்தார். இவருக்கு கரோனா உறுதியான நிலையில், கோவை சிபிசிஐடி குழுவினரும் கோவைக்குச் சென்று, தங்களை தனிமைப்படுத்திக் கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.
மதுரை நகரில் கரோனா தொற்று பதித்த 2-வது காவல் துறை உயர் அதிகாரி சிபிசிஐடி டிஎஸ்பி முரளிதரன் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment