பொதுச் செயலாளர்கள், மாநிலத் தலைவர்களுடன் வரும் 7ம் தேதி முக்கிய ஆலோசனை நடத்துகிறார் ராகுல் காந்தி.
அதற்கு
வசதியாக பிரியங்கா காந்தியை பொதுச்செயலாளராக அறிவித்து உள்ளது. அந்த
அறிவிப்பு காங்கிரஸ் தொண்டர்களிடையே புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தை போன்று கர்நாடகாவிலும்.. மேலும் சில மாநிலங்களிலும்
லோக்சபா தேர்தலில் தனித்தே போட்டியிட காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக
தகவல்கள்வெளியாகி உள்ளன.
பிரியங்காவை தொடர்ந்து, ராகுல் காந்தியும் தமது
லோக்சபா தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். அதன் முக்கிய அம்சமாக...
காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர்களுடன்
அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
அதற்கான அழைப்பும் அவர்
வெளியிட்டுள்ளார். இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்
அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: லோக்சபா
தேர்தல் குறித்து கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வரும் 9ம் தேதி காலை
10.30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.
எனவே, காங்கிரஸ் கட்சியின்
பொதுச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என்று
தெரிவிக்கப் பட்டுள்ளது. மிக முக்கியமான இந்த கூட்டத்திற்கு பின்னர்
லோக்சபா தேர்தலுக்கான தயார் நிலைகள் குறித்து அறிவிப்புகள் வெளியாகும்
என்று தெரிகிறது.
No comments:
Post a Comment