திருப்பூர் : எரிவாயு சிலிண்டர் விலை
உயர்வை கண்டித்து திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதனப்
போராட்டம் நடத்தினர்.2 தினங்களுக்கு முன்பு வீட்டு உபயோகத்திற்கான சமையல்
கேஸ் சிலிண்டர் விலையை ஒன்றிய அரசு ரூ.
25 உயர்த்தியது. இதன் மூலம் சிலிண்டர் விலை ரூ.165
அதிகரித்தது. இந்த விலை உயர்வை கண்டித்து திருப்பூர் வெள்ளியங்காடு
பகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதனப் போராட்டம்
நடத்தினர்.
சிலிண்டரை பாடையில் கட்டி அவர்கள் சாவு ஊர்வலம் சென்றனர்.சிலிண்டரை பாடையில் கட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பின்னர் ஒப்பாரி குரல் எழுப்பும் போராட்டம் நடத்தினர். கடந்த மாதம் வரை ரூ. 850 என விற்பனையான சமையல் கேஸ் சிலிண்டர் ரூ.25 அதிகரித்து ரூ.875 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினரை வாட்டி வதைக்கும் விதமாக ஒன்றிய அரசு சிலிண்டர் விலையை உயர்த்தி வருகிறது என்பதே குற்றச்சாட்டு ஆகும்.

No comments:
Post a Comment