பொதுமுடக்கத்தில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழ்நாட்டில் கரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது. தற்போது வைரஸ் பரவல் குறைந்து வருவதால் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
படிக்க | தில்லியில் உள்ள தூதரகங்கள் வெளியே குவியும் ஆப்கன் நாட்டினர்
மேலும், தமிழகத்தில் அமலில் உள்ள பொதுமுடக்கம் ஆகஸ்ட் 23ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்த ஆலோசனையில், திரையரங்கு திறப்பு, பள்ளிகள் திறப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளது.
சென்னை தலைமைச் செயலத்தில் நடைபெற்றவுள்ள ஆலோசனயில் தலைமைச் செயலர், சுகாதாரத்துறை செயலர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.
No comments:
Post a Comment