
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகள் நான்கு பேரையும்
தூக்கிலிட்டவருக்கு 80 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.
தூக்கிலிட்ட நபர் பவன் உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியைச் சேர்ந்தவர்.
இவர் தன் முன்னோரிடம் இருந்து மரண தண்டனை நிறைவேற்றுவதை கற்றுக்கொண்டவர்
என்பதால் நால்வரை தூக்கிலிடும் வாய்ப்பு இவருக்கு வழங்கப்பட்டது.

இவரது தந்தை மற்றும் முந்தைய மூன்று தலைமுறையின் இந்த பணியைதான் செய்து வந்துள்ளனர். பவன் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியவர். இவர் தூக்கிலிடும் வேலையை ஒரு சிறு பிழையின்றி செய்வார் என்று கூறப்படுகிறது. ஒருவரை தூக்கிலிட 20 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்படும். நான்கு பேர் என்பதால் பவனுக்கு 80 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டது.
newstm.in
No comments:
Post a Comment