
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரியா சக்ரபோத்தியின் சகோதரர் மற்றும் சுஷாந்த்சிங் கின் ஹஸ்கீப்பிங் மேனேஜராக பணியாற்றிய சாமுவேல் மிராண்டா அகியோரை செப்டம்பர் 9 வரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்.எஸ் தோனி படத்தின் கதாநாயகரும் பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகருமான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி மும்பையில் தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் இந்திய திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனிடையே சுஷாந்த் சிங் தற்கொலைக்கு அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி தான் காரணம் என சுஷாந்தின் குடும்பம் புகார் அளித்ததை தொடர்ந்து, சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியது மற்றும் பண மோசடியில் ஈடுபட்டதாக அவரின் காதலியும், நடிகையுமான ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. போதைப்பொருள் கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து பரபரப்பாக நடைபெற்று வரும் விசாரணையில் ரியா சக்கரபோர்த்திக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து போதைப்பொருள் தடுப்புப்பிரிவு காவல்துறையினரும் ரியா சக்கரபோர்த்தி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது சுஷாந்த் சிங் வீட்டில் ஹவுஸ்கீப்பிங் மேனேஜராக பணியாற்றிய சாமுவேல் மிராண்டா ஆகியோரிசாமுவேல் மிராண்டா ஆகியோரின் வீடுகளில் நேற்று போதைப்பொருள் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.
பின்னர் ரியா சக்கரபோர்த்தியின் சகோதரர் ஷோயிக் சக்கரபோர்த்தி சாமுவேல் மிராண்டா ஆகியோரை கைது செய்த காவல்துறையினர், இன்று மும்பை எஸ்பிளனேடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களிடம் மேலும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதால் 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கும்படி போதைப் பொருள் தடுப்பு காவல்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரையும் 9ம் தேதி வரை என்சிபி காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment