
ராய்காட்: நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால்
சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. இந்த நிலையிலும் கூட, சிலர் தங்களது
குற்றச்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் தொடர்வது பெரும் கவலையை
ஏற்படுத்துகிறது.
நாட்டிலேயே கரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள
மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்திருக்கும் பலாத்கார சம்பவம் பலரையும்
அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட்
மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கான தனிமைப்படுத்தும் மையத்தில்
தங்கவைக்கப்பட்டிருந்த பெண் நோயாளி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
பான்வெல் பகுதியில் உள்ள கரோனா மையத்தில் தங்கியிருந்த 40 வயது பெண் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் அந்த மையத்துக்குச் சென்ற காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
இது
குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது, சம்பவம் நடந்த மையத்தில்
சுமார் 400 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மையத்தில் தங்க
வைக்கப்பட்டிருந்த 40 வயது பெண் பலாத்காரத்துக்கு உள்ளான தகவல் கிடைத்ததும்
விரைந்து சென்று, பாதிக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டுள்ளார். குற்றவாளி கைது
செய்யப்பட்டார் என்று தெரிவித்துள்ளது.
அதே சமயம், இந்த சம்பவம்
குறித்து எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், சில தனிமைப்படுத்தும் மையங்களில் ஒரு நாளைக்கு ஒரே வேளைதான்
உணவு கிடைப்பதாகவும், எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
No comments:
Post a Comment