மைசூரு: மைசூருவில் நடைபெற்ற மேயர் பதவிக்கான தேர்தலில் முஸ்லிம் பெண்
வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.கர்நாடக மாநிலத்தில் மைசூரு மாநகராட்சிக்கான
மேயர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பா.ஜ., மற்றும் காங்கிரஸ், ஐக்கிய
ஜனதாதள கட்சிகள் போட்டியிட்டன. மைசூரு மேயர் பதவி பிற்படுத்தப்பட்ட
பெண்களுக்காகவும், துணை மேயர் பதவி எஸ்.சி (பொ) பிரிவினருக்கும்
ஒதுக்கப்பட்டது. மேயர் பதவிக்கு ஐக்கிய ஜனதா தளம் சார்பில் முஸ்லிம் பெண்
வேட்பாளராக தஸ்னீம் மற்றும் துணை மேயர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில்
ஸ்ரீதர் போட்டியிட்டனர். பா.ஜ., சார்பில் மேயர் பதவிக்கு கீதாஸ்ரீ
யோகானந்த் மற்றும் துணை மேயர் பதவிக்கு சந்தாமா வடிவேலு ஆகியோர்
போட்டியிட்டனர்.
மொத்தம் உள்ள 70 ஓட்டுகளில் தஸ்னீம் மற்றும் ஸ்ரீதர்
ஆகியோர் 47 ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றனர். எதிர்த்து போட்டியிட்ட
கீதாஸ்ரீ யோகானந்த் மற்றும் சந்தாம்மா வடிவேலு ஆகியோர் 23 ஓட்டுக்களை
மட்டுமே பெற்றனர்.இதனையடுத்து 31 வயதான பெண் மேயர் தஸ்னீம் மைசூரின் 33-வது
மேயராக பொறுப்பேற்க உள்ளார். அதுமட்டுமல்லாது மைசூருவின் முதல் பெண் மேயர்
என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய மைசூரு மாநகராட்சியில் பா.ஜ.,
சார்பில் 22 , காங்.,19 ஐக்கிய ஜனதா தளம் 18 பகுஜன் சமாஜ் கட்சி 1,
சுயேட்சைகள் 5 பேர் என மொத்தம் 65 உறுப்பினர்கள் உள்ளனர்.
இவர்களை தவிர 4 எம்.எல்.ஏ.,க்கள் 4 எம்.எல்.சி.,க்கள், ஒரு எம்.பி ., என உள்ளனர். இதில் பா.ஜ., காங்.,கட்சியை சார்ந்த தலா ஒருவர் வாக்களிக்கவில்லை. மேலும் பா.ஜ., உறுப்பினர் ஒருவர் போலியான ஜாதி சான்றிதழை தந்தாக அவர் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை . அவருடைய வார்டில் வரும் பிப்., 9-ல் தனியாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.

No comments:
Post a Comment