அதிரையில் தொடர் மின்வெட்டை கண்டித்து அதிரை நகர இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் 22ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.
இது தொடர்பாக நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் காளிதாஸ் தலைமை வகித்தார். தொடர் மின்வெட்டால் மாணவ, மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அதோடு தொடர் மின் வெட்டால் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது.டெங்கு காய்ச்சல் பரவாமல் சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனை யில் கூடுதல் டாக்டர்கள், ஊழியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வாய்க்கால் களையும் தூர் வார வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
இதனை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 22ம் தேதி பேருந்து நிலைய வளாகம் முன் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நன்றி : அதிரைஎக்ஸ்பிரஸ்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கார்டு உறுப்பினர் என்ற முறையில் இந்த போராட்டத்தில் நான் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு இருந்த போதிலும் இந்த போராட்டம் வெற்றிபெற என் வாழ்த்துகள் தோழர் காளிதாஸ் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும், கட்சி பாகுபாடு இன்றி அனைவரும் சேர்ந்து கலம் காண வேண்டும் இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டுமென்றால் அதிரை வாசிகளின் ஒற்றுமையில் தான் உள்ளது கண்டிப்பாக அனைவரும் கலந்து கொள்ள் வேண்டும், ஒரு காலத்தில் அதிரையில் நிலவிய லோ மின்வெட்டை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு நடத்தியது அந்த போராட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். அந்த போராட்டத்தில் நமக்கு வெற்றி கிடைத்தது இன்ஷா அல்லாஹ் அது போன்று இந்த போராட்டமும் நமக்கு வெற்றி கிடைக்கும். அதிரை வாசிகள் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும் இந்த பிரச்சனை நாம் எல்லோருக்கும் தான் என்ற சிந்தனையில் கலந்து கொள்ளவும்.
ReplyDelete