ஹைதராபாத்தில், `யங் இந்தியா நேஷனல் கோ-ஆர்டிநேஷன் கமிட்டி'
சார்பில் இன்று நடந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான
போராட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்துகொண்டார். இதில், பிரதமர் மோடியை
விமர்சித்து அவர் பேசியுள்ளார்.
பிரகாஷ்
ராஜ் பேசுகையில், ``பட்டம் படித்த சான்றிதழை வெளியில் காண்பிக்க
முடியாதவர்கள், நம்மிடம் ஆவணங்களைக் கேட்கிறார்கள். `தேர்வுக்கு பயம் ஏன்?'
போன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். பொலிட்டிகல் சயின்ஸ் படித்த
சான்றிதழ்கள் அவரிடம் உள்ளன. ஆனால், அவர் அதைக் காண்பிக்கமாட்டார். நான்
உங்களிடம் (பிரதமர்) கூறுகிறேன். இந்த நாட்டு மக்கள் உங்களுக்கு மொத்த
பொலிட்டிகல் சயின்ஸையும் கற்றுத் தருவார்கள்.
உங்களை அந்தப் பதவியிலிருந்து நீக்குவார்கள்" என்றார்.
தொடர்ந்து
பேசிய அவர், ``சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி தொடர்பான போராட்டங்களைப்
படித்தவர்கள் நடத்துகின்றனர். அரசியலமைப்பில் ஒரு வார்த்தையைக் கூட மாற்ற
விடமாட்டார்கள்" என்று கூறினார்.
மேலும், ``நீங்கள் எங்களுடைய
ஊழியர். உங்களுடைய வேலையைச் செய்யுங்கள். நீங்கள் உண்மையிலேயே உங்கள்
வேலையைச் செய்ய விரும்பினால், வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கான பதிவேட்டை
அல்லது கல்வி அறிவு இல்லாதவர்களுக்கான பதிவேட்டை உருவாக்குங்கள்" என்றும்
பேசியுள்ளார்.
போராட்டத்தில்
ஈடுபட்டவர்கள் பேசும்போது, ``நாட்டிலுள்ள 70 சதவிகித மக்கள் ஏழைகள்.
அவர்களுக்குக் கல்வி இல்லை. அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை. எங்களுடைய
வாக்குகளைப் பெற்ற பிறகு, எங்களை இரண்டாம் தர குடிமக்களாக நீங்கள் மாற்றப்
பார்க்கிறீர்கள். முதலில் தகவல் அறியும் உரிமைச் சட்டம்
பலவீனப்படுத்தப்பட்டது. தேசிய பாதுகாப்புச் சட்டம் பலமாக்கப்பட்டது.
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. பின்னர், குடியுரிமை திருத்தச்
சட்டம் நிறைவேற்றப்பட்டது. அரசியலமைப்பின் மீது நம்பிக்கை உடையவர்கள்,
இந்தச் சட்டத்தை ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராடுவார்கள்" என்று
பேசினர்.

No comments:
Post a Comment