
தம்மம்பட்டி: கெங்கவல்லி அருகே
வீரகனூரில் பொங்கலுக்கு விற்பனைக்கு வைத்திருந்த கரும்புகளை வெட்டித்தள்ளிய
வீரகனூர் இன்ஸ்பெக்டரால், வியாபாரிகள் 2 மணி நேரம் சாலை மறியல் செய்தனர்.
கெங்கவல்லி
அருகே வீரகனூர் காவல் நிலைய ஆய்வாளர் ராம் ஆண்டவர், இன்று காலை 10 மணி
அளவில், வீரகனூர் பேருந்து நிலையப் பகுதிக்கு , தனது ஜீப்பில் போக்குவரத்தை
சீர் செய்ய வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர், திடிரென விற்பனைக்கு
வைக்கப்பட்டிருந்த 40க்கும் மேற்பட்ட கரும்புகளை, அங்கிருந்த அரிவாளால்
வெட்டிப் போட்டுள்ளார். மேலும் ஒரு குறிப்பிட்ட கரும்பு வியாபாரியை
துரத்தியுள்ளார்.
அரிவாளுடன் ,
வீரகனூர் காவல் நிலையம்
சென்றடைந்த காவல் ஆய்வாளரைச் சந்தித்த கரும்பு வியாபாரிகளை திட்டியபடி
அரிவாளை திருப்பி தந்ததாக கூறப்படுகிறது. திட்டியது குறித்து தகவல் அறிந்த
கரும்பு வியாபாரிகள், மஞ்சள் வியாபாரிகள் வியாழக்கிழமை 10.15. முதல் சாலை
மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஆத்தூர் டி.எஸ்.பி. இராஜீ, சம்பவ
இடத்திற்கு விரைந்து வந்து, சாலை மறியல் செய்த வியாபாரிகளிடம்
பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் சாலை மறியல் கைவிடப்படவில்லை.
கடைசியாக பகல் 12.15 மணி அளவில் வீரகனூர் காவல் நிலைய ஆய்வாளர் ராம்
ஆண்டவர், மறியல் செய்த வியாபாரிகளிடம் , நடந்த நிகழ்விற்கு மன்னிப்பு
கேட்டார். அதைத் தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. சாலை மறியலால்
ஆத்தூர் - பெரம்பலூர் சாலையில் இரண்டு மணி நேரம் பாதிக்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment