
டெல்லி: தீவிரவாத கருத்து மற்றும் கொள்கை கொண்டவர்களை முகாம்களில்
அடைத்து மனதை மாற்ற வேண்டும் என்று முப்படை தளபதி பிபின் ராவத்
தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அதிகம் சக்தி வாய்ந்த பதவிகளில்
மூன்றாவது பதவியாக இந்தியாவின் முப்படை தளபதி பதவி பார்க்கப்படுகிறது.
இதற்கு முன் குடியரசுத் தலைவர்தான் முப்படைகளை கண்காணித்து வந்தார்.
தற்போது இதற்கு தனி தளபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் முதல்
முப்படை தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார். ராணுவப்படை
தளபதியாக இருந்தவர், தற்போது முப்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி
டெல்லி விழா
டெல்லி விழா
இந்த
நிலையில் இன்று டெல்லியில் நடந்த விழா ஒன்றில் பேசிய அவர், தீவிரவாத
கருத்து மற்றும் கொள்கை கொண்டவர்களை முகாம்களில் அடைத்து மனதை மாற்ற
வேண்டும்.
முக்கியமாக காஷ்மீர் இளைஞர்களை முகாம்களில் அடைக்க வேண்டும். பல நாடுகளில் இப்படி இருக்கிறது.
அமெரிக்கா
அமெரிக்கா எப்படி
அமெரிக்கா எப்படி
அமெரிக்காவிலும்,
பாகிஸ்தானிலும் கூட இப்படிபட்ட முகாம்கள் இருக்கிறது. இவர்கள் கொஞ்சம்
கொஞ்சமாக முகாம்களில் வைத்து மனதை மாற்றலாம். ஆனால் மொத்தமாக இந்த கொள்கை
கொண்டவர்களை மாற்றுவது கடினம்.
பாகிஸ்தான்
பாகிஸ்தான் எப்படி
பாகிஸ்தான் எப்படி
பாகிஸ்தான்
இதை முன்பே புரிந்து கொண்டு செயல்பட்டு வருகிறது. அவர்கள் உருவாக்கிய,
வளர்த்துவிட்ட தீவிரவாதம் இப்போது அவர்களேயே அச்சுறுத்துகிறது. அதை இப்போது
தடுக்க கஷ்டப்பட்டு வருகிறார்கள்.
சமூக
சமூக வலைத்தளம்
சமூக வலைத்தளம்
அதேபோல்
சமூக வலைத்தளங்களில் தீவிரவாத கருத்து பேசுபவர்களை கண்டுபிடிக்க வேண்டும்.
நாம் சரியான நபர்களை கண்டுபிடித்து அவர்களை முகாமில் போட வேண்டும். இந்த
பிரச்சனை மீது முதலில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிபின் ராவத்
தெரிவித்துள்ளார்.
source: oneindia.com
No comments:
Post a Comment