
நிர்பயா வழக்கில் குற்றவாளி முகேஷ்
சிங் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி உள்ளதால் குற்றவாளிகளை, அதன்
மீதான முடிவு தெரியும் வரை தூக்கில் போட முடியாது என்று உள்துறை அமைச்சகம்
தெரிவித்துள்ளது. டெல்லியில் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்து கொலை
செய்யப்பட்டநிர்பயாவின் வழக்கு, ஒட்டுமொத்த இந்தியாவையே
உலுக்கியது.மருத்துவ மாணவி நிர்பயா, கொல்லப்பட்ட வழக்கில்,குற்றவாளிகள்
நால்வரும் தூக்கு கயிறை எதிர்நோக்கி இருக்கிறார்கள். அக்சய் குமார் சிங்,
வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கும்
கடந்த 2017-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நால்வருக்கும்
இம்மாதம் 22ம் தேதிதூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
இதில் குற்றவாளிகளுக்கு இருந்த சட்ட வாய்ப்பு எல்லாம் முடிந்துவிட்டது.
தூக்கு
தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று இரண்டு முறை குற்றவாளிகள் மனு
அளித்தனர். ஆனாலும் சுப்ரீம் கோர்ட் இவர்களின் தூக்குத் தண்டனையை உறுதி
செய்தது.
இந்நிலையில் தனக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து
செய்ய வேண்டும் என்று குற்றவாளி முகேஷ் சிங் தனியாக டெல்லி ஹைகோர்ட்டில்
மீண்டும் மனுதாக்கல் செய்தார்.
இவரின்
மனு மீது இன்று விசாரணை நடந்தது. விசாரணையின் முடிவில் இவரின் மனுவை
தள்ளுபடி செய்து, தூக்கு தண்டனையை டெல்லி ஹைகோர்ட் உறுதி செய்தது. தூக்கு
தண்டனை கொடுக்கப்பட்டது சரிதான். ஜனவரி 22ம் தேதி தூக்கு தண்டனையை
நிறைவேற்றலாம் என்று டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.
ஆனால்
டெல்லி ஹைகோர்ட்டில் மத்திய உள்துறை அமைச்சகம் தூக்கு தண்டனையை இப்போது
நிறைவேற்ற முடியாது என்று கூறியுள்ளது. ஏனென்றால், நிர்பயா வழக்கில்
குற்றவாளி முகேஷ் சிங் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி உள்ளார்.
தூக்கு தண்டனை ரத்து செய்ய கோரி, முகேஷ் சிங் கருணை மனு அனுப்பி
உள்ளார்.இவரை போலவே வழக்கில் மீதம் உள்ள மூவரும் விரைவில் கருணை மனு
தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கருணை மனு
நிலுவையில் இருக்கும் போது தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாது. இந்த கருணை மனு
ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்பில்லை. ஆனால் மனு அப்படி ஏற்றுக்கொள்ளப்படாமல்
போனாலும் கூட, அதன்பின் மீண்டும் மனு தாக்கல் செய்ய கூடுதலாக 14 நாட்கள்
அவகாசம் கொடுக்க வேண்டும். அதனால் இப்போதைக்கு இவர்கள் நான்கு பேரும்
தூக்கு தண்டனை பெறுவது கடினம் என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.
தைரியமாக
கற்பழித்து, கொலையும் செய்து விட்டு குற்றவாளிகள் சாவகாசமாக சட்டத்தைப்
பயன்படுத்தி உயிர்பிச்சையைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை
ஹைதராபாத் மாணவி கற்பழிப்பு வழக்கில் எண்கவுண்டர் செய்யப்பட்ட
குற்றவாளிகளைப் போல அப்போதே சாகடித்திருக்க வேண்டும் என்று பொதுமக்கள் சமூக
வலைத்தளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment