புதுடில்லி: நிர்பயா குற்றவாளி முகேஷ் சிங், தூக்கு தண்டனையை ரத்து
செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி உள்ளதாக திஹார் சிறை துறை
சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.டில்லியில், 2012ல், 23 வயதான 'நிர்பயா'
மருத்துவ மாணவி, ஓடும் பஸ்சில், ஆறு பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம்
செய்யப்பட்டு, தூக்கி வீசப்பட்டார். இதில் மைனர் குற்றவாளி ஒருவர் 3
ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட, மற்றொருவர் சிறையில் தூக்கு மாட்டி தற்கொலை
செய்துகொண்டார். மற்ற நால்வருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.கடைசி
முயற்சியாக நான்கு பேரில் வினய் குமார் சர்மா மற்றும் முகேஷ் சிங்,
தண்டனையிலிருந்து தப்பிக்க, உச்ச நீதிமன்றத்தில், தாக்கல் செய்த
கியூரேட்டிவ் மனுக்கள் இன்று(ஜன.,14) தள்ளுபடி செய்யப்பட்டன.
இதனையடுத்து அவர்கள் 4 பேருக்கும் திட்டமிட்டபடி,
ஜன.,22ம் தேதி காலை, 7:00 மணிக்கு, திஹார் சிறையில் தூக்கு தண்டனை
நிறைவேற்றப்பட உள்ளது.இந்நிலையில் குற்றவாளி முகேஷ் சிங், கியூரேட்டிவ் மனு
தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி
ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பி உள்ளார் என திஹார் சிறைத்துறை சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment