திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தலில்
வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர் கடத்தப்பட்டுள்ளதாக சென்னை
உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊரக
உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த மாதம் தமிழகத்தில் 27
மாவட்டங்களில் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே
உள்ள மத்தூர் கிராமத்தை சேர்ந்த கோட்டி என்பவரின் மனைவி பூங்கொடி திருத்தணி
ஒன்றியம் 2வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு கவுன்சிலர் ஆனார்.
இதையடுத்து
பூங்கொடியின் கணவர் திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில்
புகார் அளித்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி சென்னை
உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில்
தன்னுடைய மனைவி மனைவி பூங்கொடி, மகன் நிஷாந்த், மாமியார் வசந்தி ஆகியோரை
மீட்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 9ம் தேதி தன்னுடைய உறவினர் வீட்டில் இருந்த மனைவியை ஜோதி நாயுடு என்பவர் நான் அழைத்து வரச் சொன்னதாக கூறி 3 பேரையும் மர்மநபர்கள் சிலர் கடத்தி சென்று விட்டனர். இதுகுறித்து விளக்கம் கேட்டதற்கு ஜோதி நாயுடு தன்னை மிரட்டியதாகவும் மனைவி உள்பட 3 பேரையும் திருப்பதியில் அடைத்து வைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த
தம்பதிக்கு நிஷாந்த் என்கிற 4 மாதக் கைக்குழந்தை உள்ளது. இந்நிலையில்
கடந்த 11ம் தேதி நடைபெறவிருந்த திருத்தணி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர்
பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
அதே சமயம் அதிமுக கவுன்சிலர் பூங்கொடி, மகன் நிஷாந்த்,
தாய் வசந்தி ஆகியோர் கடத்தப்பட்டதா பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 9ம் தேதி தன்னுடைய உறவினர் வீட்டில் இருந்த மனைவியை ஜோதி நாயுடு என்பவர் நான் அழைத்து வரச் சொன்னதாக கூறி 3 பேரையும் மர்மநபர்கள் சிலர் கடத்தி சென்று விட்டனர். இதுகுறித்து விளக்கம் கேட்டதற்கு ஜோதி நாயுடு தன்னை மிரட்டியதாகவும் மனைவி உள்பட 3 பேரையும் திருப்பதியில் அடைத்து வைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

No comments:
Post a Comment