புதுடில்லி: டில்லி சட்டசபையில் போட்டியிடும் 70 தொகுதிகளுக்குமான
வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. முதல்வர் கெஜ்ரிவால்
புதுடில்லி தொகுதியில் போட்டியிட உள்ளார். முன்னாள் பிரதமர் லால் பகதூர்
சாஸ்திரியின் பேரன் ஆதர்ஷ் சாஸ்திரிக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.டில்லி
யூனியன் பிரதேச சட்டசபையின் பதவிக்காலம், பிப்., 22ல் முடிவுக்கு வருகிறது.
இதனையடுத்து வரும், பிப்., 8ல் ஒரே கட்டமாக, 70 தொகுதிகளுக்கும் தேர்தல்
நடக்க உள்ளது. தேர்தல் முடிவுகள், பிப்., 11ல் அறிவிக்கப்பட உள்ளன. ஆம்
ஆத்மி, பா.ஜ., மற்றும் காங்., இடையே யார் ஆட்சியை பிடிப்பார்கள் என
மும்முனை போட்டி நிலவுகிறது. இருப்பினும், ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ., இடையே
தான் நேரடி போட்டி இருக்கும் என, அரசியல் பார்வையாளர்கள்
கருதுகின்றனர்.கடந்த, 2015ல் நடந்த சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி,
70ல், 67 தொகுதிகளில் அசத்தல் வெற்றி பெற்றது.
மீதமுள்ள மூன்று தொகுதிகளை, பா.ஜ., கைப்பற்றியது.
மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு மீண்டும் அமைந்த
பிறகு, டில்லியில் நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் இது. கடந்தாண்டு நடந்த
லோக்சபா தேர்தலில், மொத்தமுள்ள ஏழு தொகுதிகளையும், பா.ஜ.,
கைப்பற்றியது.மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்குடன், அரவிந்த்
கெஜ்ரிவால் செயல்பட்டு வருகிறார். காற்று மாசு, பாதுகாப்பான குடிநீர் என,
பல பிரச்னைகள், அவருக்கு சாதகமாக இல்லை.
பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர், ஆம் ஆத்மிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து தர உள்ளார். மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் உள்ள ஆம் ஆத்மி கட்சி, தன் பிரசாரத்தை ஏற்கனவே துவக்கி விட்டது. இந்நிலையில், 70 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.இதில், முதல்வர் கெஜ்ரிவால் புதுடில்லி தொகுதியிலும், அதிஷி மர்லினா கல்காஜி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். தற்போது எம்.எல்.ஏ.,வாக இருக்கும் 7 பேருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. நிறைய புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் ஆதர்ஷ் சாஸ்திரிக்கு பதிலாக, துவாரகாவில் வினய் மிஸ்ரா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தில் அதிக சம்பளம் வாங்கும் வேலையிலிருந்த ஆதர்ஷ் சாஸ்திரி, கடந்த தேர்தலில், ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடுவதற்காக அப்பணியை துறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment