புதுடில்லி: 'இந்திய பொருளாதாரம், வேலைவாய்ப்பின்மை குறித்து
மாணவர்களிடம் பேச மோடி தயாரா?' என காங்., எம்.பி., ராகுல் கேள்வி எழுப்பி
உள்ளார்.குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் அடுத்த
கட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக, எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், டில்லியில்
இன்று (ஜன.,13) ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா,
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள்
கலந்துகொண்டனர். தி.மு.க., இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தது. மம்தா,
மாயாவதி, கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரே ஆகியோரும்
புறக்கணித்தனர்.கூட்டத்திற்கு பின் காங்., எம்.பி., ராகுல்
செய்தியாளர்களிடம் கூறியதாவது: இளைஞர்களின் பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு
பதிலாக, மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, இந்தியாவை திசை திருப்பும்
வேலையை மோடி செய்து வருகிறார்.
இளைஞர்களின் குரலை அரசு கேட்க வேண்டும். அதனை அடக்கி
ஒடுக்கக்கூடாது.இந்தியப் பொருளாதாரம் அதல பாதாளத்தில் செல்வது குறித்து,
மாணவர்களிடம் மோடி விளக்குவாரா? இளைஞர்களை சந்திக்கும் தைரியம் மோடிக்கு
கிடையாது. போலீசார் உதவியின்றி, ஏதேனும் ஒரு பல்கலையில், இந்திய
பொருளாதாரம், வேலைவாய்ப்பின்மை மற்றும் நாட்டுக்கு அவர் என்ன செய்ய
போகிறார் என்பதை பிரதமர் மோடி விளக்க தயாரா?. இவ்வாறு அவர் கேள்வி
எழுப்பினார்.

No comments:
Post a Comment