சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் ரூ.2015 கோடி செலவில் கட்டப்பட்டது. இதை இந்திய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திறந்துவைத்தார்.
இந்த புதிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களில் அமைக்கப்பட்ட மேற்கூரைகள் 7 முறை இடிந்து விழுந்தது. மேலும் 6 முறை தடுப்பு கண்ணாடிகள் இடிந்துவிழுந்து விட்டன. இந்த சம்பவங்களில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் 14–வது முறையாக நேற்று இரவு உள்நாட்டு முனையத்தின் வருகை பகுதியில் உள்ள லிப்ட் அருகே அமைக்கப்பட்டு இருந்த 2 அடி நீளமும், ஒரு அடி அகலமும் கொண்ட 4 கிரானைட் கற்கள் திடீரென இடிந்து விழுந்தன. அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.
இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதை கண்ட விமான நிலைய ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். உடனே அதிகாரிகள் விரைந்து வந்து இடிந்து விழுந்த கிரானைட் கற்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
No comments:
Post a Comment