சென்னையில் கணினிமயமாக்கப்பட்ட ஆட்டோ மீட்டர் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 90 டிகிரியில் சுழலக்கூடிய டேப்லெட் கணினியும் ஆட்டோவில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் திரையில் பதிவு செய்யப்பட்ட திரைப்பாடல்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை பார்த்துக்கொண்டே ஆட்டோவில் பயணம் செய்யலாம். மேலும் விளம்பரங்களும் இடம்பெறும்.
முதல் கட்டமாக பெண்கள் மட்டுமே பயணிக்கும், பெண்கள் மட்டுமே இயக்கும் 25 ஆட்டோக்களில் இந்தப் புதிய மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களில் சுமார் ஆயிரம் ஆட்டோக்களில் இம்மீட்டர் பொருத்தப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment