
நாம் டிவிட்டரில் எல்லாம் டிரெண்ட் ஆகுவோம் என்று தேமுதிக பொருளாளர்
பிரேமலதா கனவில் கூட நினைத்து இருக்க மாட்டார்.
ஆனால் தற்போது உண்மையாகவே அவர் டிவிட்டரில் டிரெண்டாகிவிட்டார். தேமுதிக
தலைவர் விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தால் போதும், கண்டிப்பாக
இணையத்தில் வைரலாகிவிடுவார்.
அவர் தூக்கி அடிச்சிடுவேன் பார்த்துக்கோ என்று கூறியதில் தொடங்கி ''த்து''
என்று கூறியது வரை எல்லாமே இணையத்தில் வைரல் ஹிட். இதோ இப்போது அவர்
மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதாவும் ஹிட் அடித்து இருக்கிறார்.
ஆனால்
ஆனால் அவர் நல்ல முறையில் வைரலாகவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது. அவர்
டிவிட்டரில் பாவம் நெகட்டிவ் டிரெண்ட் அடித்து இருக்கிறார். இணையத்தில்
பலர் பிரேமலதா பேசியதை வைத்து கிண்டல் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
பேட்டி
சென்னையில் இன்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை
சந்தித்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் போலவே இவர் மிகவும் கோபமாக
பேசினார். பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசினார். திமுக மீது கடுமையான
விமர்சனங்களை இவர் வைத்தார். இவரது பேட்டி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
டிரெண்ட்
இதனால் அவர் தமிழக அளவில் டிரெண்டில் முதல் இடம் பிடித்தார். premalatha
என்ற பெயரும் premalathavijayakanth என்ற பெயரும் டிவிட்டரில் பெரிய
டிரெண்ட் அடித்தது. சென்னையில் இந்த இரண்டு பெயர்களும் ஒன்று மற்றும்
இரண்டாம் இடம் பிடித்தது.
காரணம் என்ன
பிரேமலதா செய்தியாளர்களை ஒருமையில் பேசியது பெரிய பிரச்சனை ஆனது. அதேபோல்
மற்ற அரசியல் தலைவர்களையும் அவர் மரியாதையை இல்லாமல் ஒருமையில் பேசினார்.
மேலும் அதிமுகவையும் அவர் விமர்சனம் செய்தது பெரிய சர்ச்சையானது.

No comments:
Post a Comment