
அதிமுக-தேமுதிக நடுவேயான, கூட்டணி பேச்சுவார்த்தையில் இன்றும் உடன்பாடு எட்டப்படவில்லை என்று, தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேமுதிகவுக்கு
கதவை சாத்திவிட்டது திமுக. இனிமேல் எந்த கூட்டணிக்கும் வாய்ப்பு இல்லை என
திட்டவட்டமாக அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துவிட்டார்.
இந்த நிலையில், அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் தேமுதிக தீவிரம்
காட்டத் தொடங்கியுள்ளது.
அதேநேரம், சந்தர்ப்பத்தை நன்கு, பயன்படுத்திக்கொள்கிறது அதிமுக. எனவே
தேமுதிக கேட்ட தொகுதிகளை கொடுக்காமல் வேறு தொகுதிகளை வழங்க முன்வந்துள்ளது.
இதனால் கூட்டணிகள் குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. இதுதொடர்பாக
விஜயகாந்த் தலைமையில் நேற்று தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
இந்த நிலையில், இன்று நடைபெறும் இறுதி கட்ட ஆலோசனைக்கு பிறகு, தேமுதிக
நிர்வாகிகள், ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமையகம் வந்து அந்த கட்சியுடன்,
கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஆனால் எதுவும் நடக்கவில்லை. மாறாக, நிருபர்களை சந்தித்தார் தேமுதிக
பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த். அவரோ, இன்னும் 2 நாட்கள் பொறுத்திருங்கள்.
தனித்து போட்டியா, அல்லது, யாருடன் எப்படி கூட்டணி என்பதை பற்றி
அறிவிப்போம். ஆக்கப் பொறுத்தவர்களுக்கு, ஆறப் பொறுக்காதா என்றெல்லாம்
கூறிவிட்டு கிளம்பிச் சென்றார்.
ஆக, தேமுதிக இழுபறி நீடிக்கத்தான் செய்கிறது.

No comments:
Post a Comment