
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ்
வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி
உத்தரப்பிரதேசம் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியும், அமோதி தொகுதியில்
ராகுல் காந்தியும் போட்டியிட உள்ளனர்.
மத்திய பாஜக அரசின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிய போகிறது. இதனால்
புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.
தேசிய மற்றும் மாநில கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
பெரும்பாலான கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளதுடன், தொகுதி பங்கீடு,
வேட்பாளர்கள் அறிவிப்பு என இறங்கி விட்டனர். இதனால் அனைவருமே தேர்தலை
சந்திக்க தயாராகவும் ஆர்வமாகவும் உள்ளனர்.
15 வேட்பாளர்கள்
இதில் இன்னும் ஓரிரு நாட்களில் எம்பி தேர்தலுக்கான தேர்தல் தேதி
அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்நிலையில், தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியை காங்கிரஸ்
கட்சி ஆரம்பித்து விட்டது. முதல்கட்டமாக 15 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை
காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

ராகுல், சோனியா
அதில் குஜராத் மற்றும் உத்திரபிரதேச மாநிலங்களில் போட்டியிடும் 15
வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. உத்தரப்பிரதேசம் ரேபரேலி
தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியிடுகிறார். அமேதி
தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட உள்ளார்.
பரூக்காபாத்தில் சல்மான் குர்ஷித் போட்டியிடுகிறார்.

பிரியங்கா காந்தி
உ.பியில் 11 தொகுதிகளுக்கும், குஜராத்தில் 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்
அறிவிக்கப்பட்டுள்ளனர். வேட்பாளர் பட்டியலில் 3 பேர் இஸ்லாமிய சமூகத்தை
சேர்ந்தவர்கள் ஆவர். இருப்பினும் முதல் பட்டியலில் பிரியங்கா காந்தியின்
பெயர் இடம் பெறவில்லை.

தொண்டர்கள் உற்சாகம்
இந்த தகவல் வெளியானதை அடுத்து சோனியா காந்தி வீட்டில் தலைவர்கள் குவிந்து
வருகின்றனர். தேர்தல் தேதி கூட இன்னும் அறிவிக்காத நிலையில் இந்த பட்டியல்
வெளியானதை அடுத்து நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள்
உற்சாகமடைந்துள்ளனர்.

No comments:
Post a Comment