பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக நாளை காலை 11 மணிக்கு
விசாரணைக்கு ஆஜராக நக்கீரன் ஆசிரியர் கோபாலுக்கு சென்னை சைபர் கிரைம்
போலீசார் சம்மன் அனுப்பி உள்ளது.
சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி
ஜெயராமன் அளித்த புகாரின் அடிப்படையில், நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு
சென்னை சைபர் க்ரைம் போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
பொள்ளாச்சியில்
பள்ளி, கல்லூரி மாணவிகள் உட்பட பல பெண்களை தங்களது வலையில் வீழ்த்தி
பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்த சம்பவம் நாட்டையே
அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதே
நேரம், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று பொள்ளாச்சி,
கோவை, உடுமலை, நெய்வேலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாணவர்கள் வகுப்பு
புறக்கணிப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சிபிசிஐடி போலீசார், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்றத்
தேர்தல் நடக்க உள்ள நிலையில், தமிழகjத்தை பெரும் அதிர்ச்சிக்கு
உள்ளாக்கியுள்ள பொள்ளாச்சி சம்பவம் குறித்த வீடியோவை, வெளியிட்ட நக்கீரன்
இதழ், இந்த சம்பவம் தொடர்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள்
இருப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது. மேலும் பல முக்கிய புள்ளிகளுக்கு
தொடர்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில்,
சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரைத் தொடர்ந்து,
நாளை காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை சைபர் கிரைம் போலீசார்
சம்மன் நக்கீரன் கோபாலுக்கு அனுப்பியுள்ளனர்.
source: oneindia.com

No comments:
Post a Comment