
தென்மாநிலங்களில் தமிழகத்தை தவிர்த்து மற்ற மாநிலங்களில் உள்ள 80
தொகுதிகளில் பாஜக கூட்டணி வெறும் 18 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என்று
டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
பிரபல
டைம்ஸ் நவ் தொலைக் காட்சியும், தனியார் நிறுவனமும் இணைந்து லோக்சபா தேர்தல்
குறித்த கருத்துக் கணிப்பை நடத்தின. நாடு முழுவதும் உள்ள அனைத்து
மாநிலங்களிலும் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.
அந்த முடிவுகளை
டைம்ஸ் நவ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில் மத்தியில் பாஜக
தலைமையிலான கூட்டணிக்கு 283 தொகுதிகள் கிடைக்கும் என்றும், மீண்டும் பாஜகவே
ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங். கூட்டணிக்கு 135
காங்கிரஸ்
தலைமையிலான எதிர்க்கட்சிக்கு 135 இடங்களே கிடைக்கும் என்று அந்த கருத்து
கணிப்பு முடிவில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாஜக கூட்டணி படுதோல்வி
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே
போன்று தமிழகத்தை தவிர்த்து மற்ற தென் மாநிலங்களில் பாஜக கூட்டணி
தோல்வியையை சந்திக்கும் என்று கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தை தவிர்த்து.... 4 மாநிலங்களில் உள்ள 80 தொகுதிகளில் அந்த
கூட்டணிக்கு வெறும் 18 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக
சபரிமலை விவகாரத்தில் தலைப்பு செய்திகளில் அடிபட்ட கேரளாவில் பாஜக
கூட்டணிக்கு படுதோல்வி கிடைக்கும் என்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சி கருத்து
கணிப்புகளில் தெரிய வந்திருக்கிறது.

கேரளாவில்
மொத்தமுள்ள 20 தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு ஒரேயொரு தொகுதி தான்
கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 16
தொகுதிகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இடதுசாரி
ஜனநாயக முன்னணிக்கு 3 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் கணக்கிட்டு பார்த்தால்... ஐக்கிய ஜனநாயக
முன்னணிக்கு 45 சதவீதம் வாக்குகள் கிடைக்கும்.

இடதுசாரி
ஜனநாயக முன்னணிக்கு 29.20 சதவீதமும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 21.70
சதவீதம் வாக்குகள் கிடைக்கும். மற்ற கட்சிகளுக்கு 4.10 சதவீதம் வாக்குகள்
கிடைக்கும்.

ஆந்திராவிலோ
பாஜக கூட்டணிக்கு படுதோல்வி காத்திருப்பதாக டைம்ஸ் நவ் கருத்து கணிப்புகள்
தெரிவிக்கின்றன. அதாவது மொத்தமுள்ள 25 தொகுதிகளிடுல் பாஜக கூட்டணிக்கு ஒரு
இடம் கூட கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்ள்ளது. அதேபோல காங்கிரசுக்கும்
படுதோல்வி தான் என்று கூறப்பட்டுள்ளது.

ஒய்எஸ்ஆர்
கட்சிக்கு 22 தொகுதிகளும், தெலுங்குதேசம் கட்சிக்கு 3 இடங்களும்
கிடைக்கும். வாக்கு சதவீதத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்
பின்னடைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக
கூட்டணிக்கு 5.8 சதவீதம் வாக்குகளும், ஒய்எஸ்ஆர் கட்சிக்கு 48.8 சதவீதம்
வாக்குகளும் கிடைக்கும். தெலுங்குதேசம் கட்சிக்கு 38.4 சதவீதமும்,
காங்கிரஸ் கூட்டணிக்கு 2.2 சதவீதமும் வாக்குகள் கிடைக்கும்.

No comments:
Post a Comment