கோவா:கோவா அரசியலில் திடீர் திருப்பமாக புதிய முதல்வராக பிரமோத்
சாவந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோவாவில்
முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இறுதி
அஞ்சலி செலுத்தப்பட்டு பாரிக்கரின் உடல் முழு அரசு மரியாதையுடன் மிராமர்
கடற்கரையில் தகனம் செய்யப்பட்டது.
காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். இதனால் கோவா அரசியலில் 2 நாட்களாக குழப்பம் நிலவியது.
கோவா
முன்னணிக் கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய், மகாராஷ்ட்ரவாதி கோமந்தக்
கட்சி எம்எல்ஏ சுதின் தவாலிகர் ஆகியோர் துணை முதல்வர்களாக இருப்பார்கள்
என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
40 பேர் கொண்ட கோவா சட்டசபையில் பாஜகவுக்கு
மொத்தம் 12 உறுப்பினர்கள் உள்ளனர். கோவா முன்னணியில் 3 பேர், எம்ஜிபி
கட்சியில் 3 பேர், சுயேச்சைகள் 3 பேர் என கூடுதலாக 9 பேருடன் 21
உறுப்பினர்கள் ஆதரவுடன் பாஜக ஆட்சி செய்து வருகிறது.
கோவா
சட்டசபையில் காங்கிரசுக்கு 15 உறுப்பினர்கள் உள்ளனர். எஞ்சிய 4 இடங்கள் 2
உறுப்பினர்கள் மறைவால் காலியாக இருக்கின்றன. அதேபோல, காங்கிரஸ்
உறுப்பினர்கள் 2 பேர் ராஜினாமா செய்ததாலும் காலியாக உள்ளன.
source: oneindia.com

No comments:
Post a Comment