ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நவாஸ் கனி போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
மக்களவைத்
தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ்,
மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய
யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக்
கட்சி ஆகியன இடம்பெற்றுள்ளன.
அதில்,
காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 மக்களவைத் தொகுதிகளும்,
மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா
2
தொகுதிகளும், மதிமுக, முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தொகுதிகளும், மதிமுக, முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மதிமுகவுக்கு ஒரு மாநிலங்களவை தொகுதியும்
ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக நேரடியாக
போட்டியிடுகிறது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் அதன்
கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை மு.க.ஸ்டாலின்
சென்னையில் இன்று வெளியிட்டார். இதில் ராமநாதபுரத்தில் கூட்டணி கட்சியான
முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதனிடையே
ராமநாதபுரத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் நவாஸ் கனி
வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை அக்கட்சியின் தலைவர் காதர்
மொய்தீன் சென்னையில் இன்று அறிவித்துள்ளார். மேலும் நவாஸ் கனி ஏணி
சின்னத்தில் போட்டியிடுவார் எனவும் அவர் கூறியுள்ளார். நவாஸ் கனி எஸ்.டி
கூரியர்ஸ் நிறுவனத்தில் தலைவராக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment