மக்களவைத் தேர்தலில் திமுக போட்டியிடும் 20 தொகுதிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மக்களவைத்
தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ்,
மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய
யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக்
கட்சி ஆகியன இடம்பெற்றுள்ளன.
அதில்,
காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 மக்களவைத் தொகுதிகளும்,
மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா
2 தொகுதிகளும், மதிமுக, முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி,
இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியும்
ஒதுக்கப்பட்டுள்ளன.
மதிமுகவுக்கு ஒரு மாநிலங்களவை தொகுதியும்
ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக நேரடியாக
போட்டியிடுகிறது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் திமுக போட்டியிடும் 20
தொகுதிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதனை அக்கட்சியின் தலைவர்
மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று வெளியிட்டார்.
திமுக போட்டியிடும் தொகுதிகள்
1. வட சென்னை
2. தென் சென்னை
3. மத்திய சென்னை
4. ஸ்ரீபெரும்புதூர்
5. காஞ்சிபுரம் (தனி)
6. அரக்கோணம்
7. வேலூர்
8. தருமபுரி
9. திருவண்ணாமலை
10. கள்ளக்குறிச்சி
11. சேலம்
12. நீலகிரி (தனி)
13. பொள்ளாச்சி
14. திண்டுக்கல்
15. கடலூர்
16. மயிலாடுதுறை
17. தஞ்சாவூர்
18. தூத்துக்குடி
19. தென்காசி (தனி)
20. திருநெல்வேலி
1. வட சென்னை
2. தென் சென்னை
3. மத்திய சென்னை
4. ஸ்ரீபெரும்புதூர்
5. காஞ்சிபுரம் (தனி)
6. அரக்கோணம்
7. வேலூர்
8. தருமபுரி
9. திருவண்ணாமலை
10. கள்ளக்குறிச்சி
11. சேலம்
12. நீலகிரி (தனி)
13. பொள்ளாச்சி
14. திண்டுக்கல்
15. கடலூர்
16. மயிலாடுதுறை
17. தஞ்சாவூர்
18. தூத்துக்குடி
19. தென்காசி (தனி)
20. திருநெல்வேலி

No comments:
Post a Comment