
கர்நாடகாவில் இடிந்து விழுந்த 6 மாடி கட்டிடம், மீட்பு பணி தீவிரம்!
தார்வாட்: கர்நாடக மாநிலத்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த
விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 40க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில்
சிக்கியுள்ளதாக தெரிகிறது.
கர்நாடக மாநிலம் தார்வார்ட் பகுதியில் கட்டப்பட்ட நிலையில் இருந்த கட்டிடம்
ஒன்று பிற்பகல் நேரத்தில் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது கட்டிடம்
கட்டும் பணியில் ஈடுட்டிருந்த தொழிலாளர்கள் 15 பேர் உட்பட 40க்கும்
மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர்.

இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலியாகி உள்ளார். 40க்கும் மேற்பட்டோர்
இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனர். படுகாயமடைந்த சிலர் மீட்கப்பட்டு அருகில்
உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இதுகுறித்து முதல்வர் குமாரசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி
இருப்பதாவது:
தார்வார்டில் கட்டப்பட்டு வந்த நிலையில் கட்டிடம் ஒன்று இடிந்து
விழுந்த தகவல் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மீட்புப் பணிகளைத் தொடங்க
தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
5 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. மீட்புக் குழுவினரை
உடனடியாக விமானத்தில் அழைத்துச் செல்ல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன
என்று அவர் கூறியிருக்கிறார்.

No comments:
Post a Comment