
மோடி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் இதுதான் இந்தியாவுக்கு
கடைசி தேர்தலாக இருக்கும் என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்
கூறியுள்ளார்.
மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கு மோடி என்ன வேண்டுமானாலும் செய்வார் என்று
பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்த ராஜஸ்தான் முதல்வர் கெலாட் அவர் மீண்டும்
வெற்றி பெற்றுவிட்டால் மீண்டும் தேர்தலே நடக்காத அளவில் நாட்டை கொண்டு
செல்வார். எப்படி சீனா ரஷ்யா போன்ற நாடுகள் இப்போது இருக்கிறதோ அது போல
இனிமேல் இந்தியாவிலும் தேர்தல் நடைபெறாது என்றார் அவர்.
நமது நாடும் நாட்டின் ஜனநாயகமும் பெரும் ஆபத்தில் உள்ள்ளது என்று
அச்சம் தெரிவித்த அசோக் கெலாட் ஜனநாயகம் என்பதே சகிப்புத்தன்மை கொண்டது.
ஆனால் பாஜக தலைவர்களுக்கு சகிப்புத்தன்மை என்பதே கிடையாது அவர்களுக்கு
பொறுமையும் இல்லை, அவர்கள் தங்களிடம் யாரும் கேள்வி கேட்பதை
விரும்புவதில்லை. பொறுமையும் சகிப்புத்தன்மையும் அவர்கள் மரபணுவிலேயே இல்லை
என்றும் அசோக் கெலாட் காட்டமாக கூறினார். மோடிக்கு தான் பதவிக்கு
வரவேண்டும் என்பது மட்டுமே அவரது இலக்கு. அந்த இலக்கை அடைய என்ன
வேண்டுமென்றாலும் செய்வார் மோடி என்றும் தெரிவித்தார். பதவியை அடைய போர்
செய்வது தவறானது என்று தெரிந்தாலும் பாகிஸ்தானுடன் போருக்கு செல்வார்.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் ஆதரவை பெற வெளிநாட்டு தூதரகங்களை
தவறாக பயன்படுத்தி வருகிறார். ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையில் நாட்டை
கொண்டு செல்லலும் மோடி எதிர்காலத்தில் பிரதமராக யார் வரவேண்டும்,
குடியரசுத் தலைவராக யார் வரவேண்டும் என்பதையும் அவர்களே தீர்மானித்துக்
கொள்வார்கள், சீனா ரஷ்யா ஆகிய நாடுகளில் என்ன நடக்கிறதோ அதுவே இனிமேல்
இந்தியாவிலும் நடக்கும் என்றும் கூறினார்
சில நாட்களுக்கு முன்னர் பாஜக எம்.பியும் சாமியாருமான சாக்ஷி மகராஜ் பாஜக
நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது இந்த ஒரு தேர்தலுக்குதான் நாம்
பாடுபடவேண்டும். கடந்த முறை நாடு முழுவதும் வீசிய மோடி அலை இப்போது
சுனாமியாக மாறியுள்ளது மோடி மீண்டும் பிரதமர் ஆகிவிட்டால் இனிமேல்
இந்தியாவில் தேர்தலே நடைபெறாது என்று கூறியிருந்தது குறிப்பிட தகுந்தது.

No comments:
Post a Comment