சிவகாசி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக
பணியாற்றுபவர் ராமச்சந்திரன். இவர் நேற்று இரவு சிவானந்தா காலனி பகுதியில்
ரோந்து சென்றார். அப்போது அங்குள்ள டாஸ்மாக்கடை அருகில் போதையில் 3 பேர்
தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
உடனே காவலர் ராமச்சந்திரன் 3
பேரையும் எச்சரித்து வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். ஆனால் அவர்கள்
பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதத்தில் நடந்து கொண்டனர். மேலும்
மதுபோதையில் ராமச்சந்திரனை கம்பால் தாக்கிவிட்டு தப்பினர். படுகாயம் அடைந்த
அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் ராமச்சந்திரனை தாக்கியது லட்சுமியாபுரத்தைச்
சேர்ந்த சங்கர் (வயது27), அய்யம்பட்டி ராஜ்குமார் (27), பிரபு (29) என்பது
தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

No comments:
Post a Comment