அருணாசல பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அருணாசலபிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்திய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. அருணாசலில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி தொடரலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், முதல்வர் நபம் துகிக்கு எதிராக கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 14 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மேலும் சிலர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்ததால் 60 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் காங்கிரஸ் ஆதரவு எம்எல்ஏக்களின் பலம் குறைந்தது. பாஜக ஆதரவு எம்எல்ஏக்களின் பலம் 34ஆக மாறியது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அங்கு இந்த அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து பாஜக கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் நபம் துகிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, புதிய சட்டமன்ற கட்சித் தலைவரையும்
தேர்ந்தெடுத்தனர். இந்த வழக்கு உச்சநிதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, கடந்த ஜனவரி முதல் அருணாச்சல பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் அருணாச்சலில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் காங்கிரஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனு மீது இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. அருணாசல பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும்
அருணாசலபிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்திய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. அருணாசலில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி தொடரலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. காங்கிரஸ் ஆளும் உத்தராகண்ட் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்திய நிலையில் அது செல்லாது என்று, அம்மாநில ஹைகோர்ட் தீர்ப்பளித்தது. இந்நிலையில், அருணாச்சல பிரதேச விவகாரத்திலும் மத்திய அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment